மஹிந்தவை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு கொண்டு வர முயற்சி

mahindaகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு கொண்டு வர சிரேஸ்ட உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவசர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றி வரும் மாலனி பொன்சேகா அல்லது ஜானக பிரியந்த ஆகியோரை சந்தித்து இது குறித்து பேசத் தீர்மானித்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் முன்வந்துள்ளனர். ஆசனத்தை மஹிந்தவிற்கு விட்டுக் கொடுப்பதா என்பது தொடர்பில் மாலினி பொன்சேகாவோ அல்லது ஜானக பிரியந்தவோ இதுவரையில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

எவ்வாறெனினும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கே உண்டு. எனினும், இந்த திட்டத்திற்கு தற்போதைய பொதுச் செயலாளா சுசில் பிரேமஜயந்த இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment