மீராவோடை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 20ஆவது மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டியும் பாடசாலையின் புதிய அரங்கு திறப்பு விழா நிகழ்வும் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (21) பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களும்,கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட்,பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர்,மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜந்திரன் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.நஸீர், முன்பள்ளி உதவி கல்விப்பணிப்பாளர் ஜெமிலூன்நிஸா,ஓட்டமாவடி கோட்ட கல்வி அதிகாரி ஏல்.எல்.மீராசாஹிப்,கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் அதிகாரி எச்.எம்.எம்.றுவைத், அதிபர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மூன்று இல்லங்கள் இப்போட்டி நிகழ்வில் பங்குபற்றின கமரியா பச்சை நிற அணி 547 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினையும்,சம்சியா நீல நிற அணி 601 புள்ளிகளை பெற்று 2ஆம் இடத்தினையும், நஜீமியா சிவப்பு நிற அணி 653 புள்ளிகள் அடிப்படையில் 52 மேலதிக புள்ளிகளால் இரண்டு இல்லங்களையும் வெற்றி பெற்று முதல் இடத்தினை பெற்றுக்கொண்டது.
இதன் போது மூன்று இல்ல மாணவர்களது அணி நடை,கைறு இழுத்தல்,அஞ்சல் ஓட்டம்,ஆரம்ப பிரிவு மாணவிகளது உடற்பயிற்சி நிகழ்ச்சி மற்றும் பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் வாழ்கை படாத வாலிபர்களுக்கும் வாழ்கைப்பட்டோருக்குமான கைறு இழுத்தல் போட்டியும் இடம் பெற்றது இதில் வாழ்கைப்பட்ட அணியினர் வெற்றியீட்டி கொண்டனர்.
இவ் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவிய வினைளயாட்டு குழு மற்றும்,பாடசாலையின் பழைய மாணவர்கள்,அபிவிருத்தி குழுக்கள் விஷேடமாக பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம்.அன்வர், உடற்கல்வி ஆசிரியர்களான எம்.ஐ.சுபைர்,யூ.எல்.எம்.சிபான்,ஆகியோருக்கு தமது நன்றி பாராட்டுக்களை அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன் தெரிவித்துக்கொண்டார்.
Published by




Leave a comment