காத்தான்குடி: காத்தான்குடியில் மூன்று பாடசாலைகளுக்கு டெனிஸ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. MLAM. ஹிஸ்புல்லாஹ்வின் (பா.உ.) நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 19-02-2015 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இதன் போது மேற்படி விளையாட்டு உபகரணங்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் உரிய பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இங்கு வழங்கி வைக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு உபகரணங்கள் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கும், காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசியபாடசாலைக்கும்,காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்திற்கும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment