மோடியின் கோட் சூட் 4.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது

modiகுஜராத்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தடவை மட்டுமே அணிந்திருந்த, சர்ச்சையை கிளப்பியிருந்த கோட் சூட் ஒன்று அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய இந்த ஏலத்தில் இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரியான ஹித்தேஷ் பட்டேல் தனது தந்தைக்காக இந்த ஆடையை வாங்கியுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது மோடி அணிந்திருந்த இந்த கோட், வர்த்தகர் ஒருவரால் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது.இந்த ஆடையில் மோடியின் பெயர் தங்க ஜரிகையால் பொறிக்கப்பட்டிருந்தது.

modi

இந்த கோட் சூட்டை வீண் செலவு என்று பலரும் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment