பாகிஸ்தான் V மேற்கிந்தியத் தீவுகள்: நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச தீர்மானம்

pakistan v west indies ykk– MJ

கிறைஸ்சேர்ச்: உலகக் கிண்ணத்தின் 10வது போட்டி, நியுசிலாந்தின் கிறைஸ்சேர்ச் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு ஆரம்பமாகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பாஉல் ஹக், முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.

இரு அணிகளும் தங்களது முதலாவது புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளவும், தளர்ந்திருக்கும் நம்பிக்கைகளை மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளவும் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் பிரதான போட்டியாக அமைகிறது.

பாகிஸ்தான் அணி, தான் இறுதியாக விளையாடிய 13 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதேபோல், மேற்கிந்தியத் தீவுகள் அணி, தான் இறுதியாக விளையாடிய 8 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.

pakistan v west indies ykk

இரு அணிகளும் தான் எதிர்கொண்ட கடந்த ஒருநாள் போட்டிகளில் தோல்விகளை அதிகம் சந்தித்திருந்தமைக்குப் பிரதான காரணமாக பாகிஸ்தான் அணியில் சயீட் அஜ்மல் இல்லாதலும், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சுணில் நரைன் இல்லாததாலும் முக்கிய காரணமாக சொல்ல முடியும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கெயிலும், பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் அப்ரிடியும் இன்றைய போட்டியில் இருதரப்பிலும் சவால்மிக்க வீரர்களாக எதிர்வுகூறப்பட்டிருந்தபோதிலும், போட்டி எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

இன்றைய மற்றுமொரு போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து பங்களாதேஸ் அணி மோதுகிறது. அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி பகல் 1:30 மணிக்கு இப்போட்டி இடம்பெற இருக்கின்றது.

Published by

Leave a comment