அம்பாறை: இந்த புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்ட பிறகு அம்பாறை மாவட்டதைச் சேர்ந்த ஒரு சில சில்லறைகள் எனது தாய் மாமனான மயோன் முஸ்தப்பாவை வைத்து வியாபரம் செய்து கொண்டு வருகின்றார்கள். கடந்த கால அரசாங்கத்தினால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். அவர் நாடு திரும்புவதும் திரும்பாமல் இருப்பதும் மற்றும் அரசியலில் ஈடுபடுவதும் ஈடுபடாமல் இருப்பதும் அவருடைய விருப்பம்.
ஆனால் அவருடைய மருமகனாகிய நான் தொடர்ந்தும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தோடும் கட்சியோடும் எனது அரசியல் பணி தொடரும். ஏனென்றால் எனது ஆதரவாளர்கள் சொந்தக்காரர்கள், மற்றும் நண்பர்கள் எல்லோரும் என்னைத் தொடர்பு கொண்டு உங்களது மாமா வரப்போகின்றார். நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என்ற கேள்வியை என்னிடம் தொடுக்கின்றார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில் எனது ஆதவாளார்கள் குடும்பத்தினர்கள மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் இந்த செய்தியை அறியத்தருகின்றேன்.
நான் தொடந்தும் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. அம்பாறை மாவட்டத்தில் மிக கூடுதலான முஸ்லீம் மக்கள் முஸ்லீம் காங்கிரஸினையே ஆதரிக்கின்றார்கள். அத்தோடு எனது ஆதரவாளர்கள் சொந்தக்காரர்கள மற்றும் நண்பர்கள் என்னை தொடர்ந்தும் முஸ்லீம் காங்கிரஸில் இருக்குமாறு கேட்டுக் கொண்டதிற்கு இணங்க எனது பயணம் முஸ்லீம் காங்கிரஸில் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துவதாக எ.சி. யஹியாகான் உயர்பீட உறுப்பினரும் நிதி மற்றும் கணக்காளர்க்கான பணிப்பாளர் அம்பறை மாவட்ட பொருளாளர் தெரிவித்தார்.
Published by


Leave a comment