டெல் அவிவ்: இஸ்ரேலின் மத்தியதரைக் கடல் பகு தியில் சுழியோடிகள் 1000 ஆண்டுக ளுக்கு முந்தைய பாரிய எண்ணிக் கையிலான தங்க நாணய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதில் சுமார் 2,000 தங்க நாணய குற்றிகள் இருந்துள்ளன.
செசரியாவின் பண்டைய துறைமுகப் பகுதியில் இஸ்ரேலில் இதுவரை கண் டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய தங்க நாணயப் புதையல் கண்டெடுக்கப்பட் டுள்ளது என்று இஸ்ரேல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கடலுக்கடியில் புதையல்களை தேடும் சுழியோடிகளின் குழுவென்றினாலேயே இந்த தங்க நாணயங்கள் கண்டுபிடி க்கப்பட்டுள்ளன. இவை சுமார் ஒன்பது கிலோகிராம் எடைகொண்டது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவை விலைமதிப்பற்றவை என்று அவர்கள் விபரித்துள்ளனர். இந்த தங்க நாணயங்கள் பாதிமித் கலீபத் காலத்துடையதென குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஷியா முஸ்லிம் பேரரசான பாதிமித் கலீபத் கி.பி. 909 முதல் 1171 வரை மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தது. “எகிப்தில் இருந்த மத்திய அரசுக்கு வரிப்பணத்தை ஏற்றிச் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானதில் இந்த நாணயங்கள் கடலில் புதையுண்டிருக்கலாம்” என்று இஸ்ரேல் தொல் பொருள் நிர்வாகத்தின் கடல் தொல்லியல் நிபுணர் கொபி ஷர்வித் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை செசரியாவில் நகரை பாதுகாக்கும் பாதிமித் படையினருக்கு சம்பளம் வழங்க கொண்டு வந்த நாணயங்களாகவும் இவை இருக்கலாம்.அதேபோன்று பாரிய வர்த்தக கப்பல் ஒன்றின் நாணயங்களாகவும் இருக்கலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புதையல் அரச சொத்தாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அதனை கண்டுபிடித்தவர்களுக்கு எந்த கொடுப்பனவும் வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment