“மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருகின்ற போது அதற்கு பலர் தடைகளை ஏற்படுத்துகின்றனர்”

rifkhan– இர்ஷாட் ரஹ்மதுல்லா

மன்னார்: மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருகின்ற போது அதற்கு பலர் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.அந்த தடைகளையும் மீறி மத்திய மற்றும் மாகாண அரசுகளின் மூலம் தேவையான மக்கள் நலன் திட்டங்களை நாம் கொண்டுவந்து மக்களுக்கு கொடுத்துவருவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் எதிர்காலத்திலும் எம்முடன் ஒற்றுமையாக நீங்கள் இருப்பீர்கள் என்பதை இந்த விழாவினை பார்க்கின்ற போது புரிகின்றது என்றும் தெரிவித்தார்.

மன்னார் சாந்தி புரத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

rifkhan

மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பேசுகையில் –

மத்திய அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும்.அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த மாவட்டத்துக்கு ஆற்றியுள்ள பணிகள் அளப்பறியது.இன்றும் இந்த மக்களின் நலன் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்திவருகின்றார்ஆனால் சிலர் மக்கள் பிரதி நிதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்த மக்களுக்கு எதையும் செய்யாது.அபிவிருத்திகளை செய்துவரும் எமது கட்சியின் தேசிய தலைவரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை விமர்சிப்பதனையே பணியாக கொண்டுள்ளனர்.

rifkhan (2)

இவர்கள் எதை செய்தாலும் எம்மை நம்பி நிற்கும் மக்களுக்கும்.இம்மாவட்டத்துக்கும் செய்யக் கூடிய அனைத்து பணிகளையும் நாம் செய்வோம் என்றும் கூறினார்.

Published by

Leave a comment