செங்கலடி: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி, செங்கலடி கறுத்தப் பாலத்தின் கீழ் நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்றை கண்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சடலமானது உமா மில் வீதி, கொம்மாதுறையை சேர்ந்த சுந்தரம் மகேந்திர ராசா (27) என்பவருடையது என அவரது தாயார் கங்கை அம்மா என்பவர் அடையாளம் காட்டினார்.
பிறப்பிலிருந்தே புத்தி சுயாதீனமான இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகவும், இவரை வெளியில் எங்கும் அனுப்பாமல் பாதுகாத்தாலும் எங்கள் எல்லோருக்கும் அடித்துவிட்டு வெளியேறிவிடுவார் என்றும் கூறினார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை (15) பகல் சாப்பாட்டின் பின்னர் வீட்டிலிருந்து வெளியேறிய இவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி அலைந்தோம். இன்று காலை ஏழு மணியளவில்தான் செங்கலடி கறுத்தப் பாலத்துக்கு கீழ் சடலமொன்று மிதப்பதாக அறிந்து, வந்து பார்த்தபோதுதான் எனது மகனின் சடலம் என அடையாளம் கண்டேன்.
ஏறாவூர் சுற்றுலா நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்கு சடலத்தை அனுப்பிவைத்தார். ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Published by



Leave a comment