ஏறாவூர்: கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடந்த 6ம் திகதி சத்தியப்பிரமானம் செய்து கொண்ட அலி ஸாஹிர் மௌலானா தனது சொந்த ஊரான ஏறாவூறுக்கு நேற்று (17.02.2015) வருகை தந்த போது கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஏறாவூர் பொது மக்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இருந்து புன்னக்குடா வீதி வழியாக பேண்ட் வாத்திய இசையோடு ‘மௌலானா சதுக்கம்’ வரை அழைத்து வரப்பட்டு வரவேற்புக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இந் நிகழ்வுகளின் போது ஏறாவூர் நகர சபை பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம். தஸ்லீம், நகர சபை உறுப்பினர்களான எம்.எல். ரெபுபாசம், ஐ. வாசித் அலி மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். சயீட், உட்பட பெருந் தொகையான பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment