காத்தான்குடி பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் விழா

unnamedஎம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: நாகரீக மோகத்தினுள் திளைத்துள்ள இன்றைய இளைஞர் சமுதாயம் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடிப்படைகளை பின்பற்றுவது இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு காத்தான்குடி பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாகரீகம் என்ற போர்வையில் பல்வேறு அநாகரீகமான மேற்குலக கலாச்சாரத்தினை பிரதிபலிக்கக்கூடிய சம்பவங்கள் இடம் பெறுகின்றன. இதனால் எமது இளைஞர், யுவதிகள் சீரழிவதை சமூகத்தில் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால், இஸ்லாம் ஒழுக்கவிழுமியங்களையும் பண்பாடுகளையும் போதிக்கின்றது இந்த நடைமுறை எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகும்.

இந்த வகையிலேயே கலாச்சார நிலையங்களின் ஊடாக இவை போதிக்கப்படுகின்ற அதே வேளை கண்காணிக்கப்படவும் வேண்டும். எமது இளைஞர் சமூகம் சரியான பாதையில் செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அத்துடன் காத்தான்குடியைச் சேர்ந்த கலைப்படைப்பாளிகளை பாராட்டுகின்றேன்   என தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக காத்தான்குடி உதவிப்பிரதேச செயலாளர் ஏ. சி. அப்கர் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் எம். முனீர் நளீமி உட்பட கலைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.

unnamed1

unnamed

Published by

Leave a comment