வாகரை: உலகலாவிய இளைஞா் தலைமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இளைஞா் பரிமாற்ற நிகழ்ச்சி திட்டத்திற்கமைவாக புரித்துணர்வு மற்றும் மனித நேய நடைமுறைகளை ஊக்குவிக்கும் ‘நிப்பொண்மாரு’ (NIPPONMARU) ‘நல்லென்ன உலக சுற்றுலா’ நிகழ்ச்சி திட்டத்திற்கமைவாக 17.02.2014 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திற்கு ஜப்பான் நாட்டு சார்பில் வருகை தந்த இளைஞா், யுவதிகளை வரவேற்கும் நிகழ்வு வாகரையில் இடம் பெற்றது.
தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் கிழக்கு பிராத்திய பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் வாழிகாட்டலில் மாவட்ட இளைஞா் கழகங்களின் சம்மேளனமும், வாகரை பிரதேச இளைஞா் கழக சம்மேளனமும் இனணத்து இவ்வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருத்தனர்.
இந்நிகழ்வின் அதிதிகளாக மட்டு மாவட்ட பா.உ சீனித்தம்பி யோகஸ்வரன், தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் நிருவாகப்பணிப்பாளா் மனுல சமல் பேரேரா, தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளா் க.தவராஜா, மட்டு மாவட்ட பணிப்பாளா் எம்.என்.எம்.நைறூஸ், கிழக்கு முன்பள்ளி பணிப்பாளா் பொண் செல்வ நாயகம் மாவட்ட சம்மேளனத்தின் தலைவா் ஆர் வேனுராஜ், உப தலைவா் எம்.ரீ.எம்.பாரிஸ், வாகரை பிரதேச சம்மேளன தலைவா் ரீ. சத்தியநாதன் உள்ளீட்ட இளைஞா் சேவை அதிகாரிகள் இளைஞா் கழகங்களின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டனா்.
இரு பகுதிகளாக நடை பெற்ற இந்நிகழ்வில் முதலாவது பகுதியில் மட்டு மாவட்ட தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் உருவாக்கத்தில் இடம் பெற்ற ‘லலிதா கலா’ நாட்டிய குழுவினரின் நட நிகழ்ச்சி உள்ளீட்ட கலைகலாசார நிகழ்வுகள் இடம் பெற்றன.
இரண்டாம் பகுதியில் மனித நேயம் பேணும் சிரமதாண நிகழ்வு வாகரை மாவட்ட வைத்திய சாலையில் இடம் பெற்றது. வைத்தியசாலையின் சுற்று புறங்களை தூய்மை படுத்தல், வைத்தியசாலை சுற்று மதிலுக்கான வர்ணம் பூசுதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.
ஜப்பான் நாட்டு இளைஞா் குழுவினர் நமது வருகைக்கான நினைவு அடையாளமாக வர்ணம் பூசப்பட்ட ஒரு பகுதி சுவரில் நமது நாட்டின் தேசிய கொடியுடன் கூடிய கப்பல் ஒன்றை வரைந்து தமது பெயரினையும் குறிந்து கொண்டதுடன் வாகரை பிரதேச சம்மேளனத்திற்கும் வைத்தியசாலைக்கும் நினைவு சின்னம் ஒன்றினைவும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment