போகந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியில் கொள்ளை

NCY-bank-robbery1[1]எம்.ஐ.அப்துல் நஸார்

போகந்தர: பிலியந்தலை போகந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கிக் கிளையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

முகத்தை முழுமையாக மறைக்கக் கூடிய தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவர் ரி 56 ரக துப்பாக்கியால் வேட்டுக்களைத் தீர்த்ததாக வங்கியின் பாதுகாப்பு ஊழியரொருவர்  தெரிவித்தார். பாதுகாப்பு ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு வங்கியின் முன்புற கண்ணாடியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்பட்டுள்ள நட்டங்கள் தொடர்பில் இது வரை மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் பொலீஸார் தெரித்தனர்.

Published by

Leave a comment