தோஹா: ஐக்கிய அமெரிக்காவில் கொல்லப்பட்ட மூன்று முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குகண்டணம் தெரிவிப்பதற்காக கத்தார் இல் Qatar Foundation ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில்பெரும்திரலான சகோதரர்கள் கலந்து கொண்டதை காணலாம்.
பொலிஸ் விசாரணையின் படிஇந்த தாக்குதல் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் சந்தேக நபரின் மனைவி கெரன் ஹிக்இதனது 46 வயது கணவர் கிரேக் வாகனத் தரிப்பிடம் குறித்து அயலில் இருக்கும் அனைத்து மதத்தினருடனும் மோதலில் ஈடுபட்டிருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தீஹ் பரகத், அவரது மனைவி யுசோர் முஹமது அபூ சல்ஹா மற்றும் அவளது சகோதரி ரஸான் முஹமது அபூ சல்ஹா ஆகியோரது சடலம் வடக்கு கரோலினாவில் இருக்கும் அவர்களது வீட்டில் தலையில் சூட்டுக் காயத்துடன் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டன. இந்த தாக்குதல் வெறுப்பு காரணமாக இடம்பெற் றிருப்பதாக கொல்லப்பட்டோரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இரு சகோதரிகளது தந்தையான முஹமது அபூ சலாஹ், படுகொலை முறையில் இந்த கொலை நடத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ‘இந்த நபர் இதற்கு முன்னர் பல முறையும் எனது மகள் மற்றும் அவரது கணவரை இடுப்பில் துப்பாக்கியை வைத்தபடி எதிர்கொண்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘இந்த நபர் குறித்து அவர்கள் அசவ்கரியத்துடனேயே இருந்தார்கள். ஆனால் இந்த அளவுக்கு போகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கொலையாளி மீது கொலைக்குற்றம்உட்பட மேலும் மூன்று குற்றச்சாட்டுக்கள்முன்வைக்கப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் பெரும்பரபரப்பாக பேசப்படுவதுடன் இவர்களை கொடூரமாக கொன்றவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அமெரிக்க அரசிற்கு வலியுறுத்தியுள்ளனர்.
இதுவொரு மத வெறுப்பினால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல் என தெரிவித்துள்ள கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தீவிரபுலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் ஒரு நாத்திகவாதி என்றும் அவரது பேஸ்புக்கில் மதங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.
Published by

Leave a comment