மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் 3 மாத கால ஆங்கில மற்றும் தொழிநுட்ப பாடநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

thowfeek engr– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் 3 மாத கால ஆங்கில மற்றும் தொழிநுட்ப பாடநெறியினை பூர்த்தி செய்த 63 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  15-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் நிதி, நிருவாக அதிகாரி எஸ்.எம்.அதீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

thowfeek engr

இதன் போது அதிதிகளினால் 3 மாத கால ஆங்கில மற்றும் தொழில் நுட்ப பாடநெறியினை பூர்த்தி செய்து திறமையான சித்தி பெற்ற மாணவர்கள் சான்றிதழும்,விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இப் பாடநெறியில் அதி கூடிய புள்ளிகளைப் கல்முனையைச் சேர்ந்த செல்வி ஏ.பி.நிவைதாவும் கல்லூரியில் 100 வீதம் வரவை காத்தான்குடியைச் சேர்ந்த செல்வி எம்.எச்எம்.நுஸ்ஹாவும் பெற்றுக்கொண்டனர்.

COLLEGE

இங்கு குறித்த பாடநெறியினை மாணவர்களுக்கு கற்பித்த விரிவுரையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் (றியாதி) ,கல்லூரியின் செயற்குழு உறுப்பினர் பொறியியலாளர் தவ்பீக் உட்பட மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

COLLEGE (2)

hizbullah

Published by

Leave a comment