திருகோணமலை: திருகோணமலை ஜமாலியா பிரதேச மக்களுக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் அவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று 13.02.2015 வெள்ளிக் கிழமை மாலை ஜமாலியா விளையாட்டுக் கழக கட்டடத்தில் இடம் பெற்றது.
இதன்போது ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஒன்றரை தஸாப்தத்திக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது பற்றி பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முஹைஸினாலும் சமூக அமைப்புக்களாலும் நலன் விரும்பிகளாலும் பிரதியமைச்சரின் கவனத்திற்கு எடுத்துக் காட்டப்பட்டது.
அதனை நிவர்த்தி செய்வதாகவும் இம்முறை பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் எமது பிரதேசத்திற்கு ஒதுக்கீடு செய்யவுள்ள முழு நிதியையும் எமது ஜமாலியா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்கள் வேண்டிய போது அதனையும் ஏற்றுக் கொண்டதோடு மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனடியாக தீர்க்கப்படக்கூடிய விடயங்கள் கலந்துரையாடியதுடன் கண்ணியா மற்றும் லவ்லேன் துளசிபுர காணிப் பிரச்சினை சம்மந்தமாக அவசரமாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி எஸ். ஜலதீபன் அவர்களை இடத்துக்கு வரவழைத்து கலந்துரையாடி அவர் முன்னிலையில் தீர்வு காணப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது.
மேலும் லவ்லேன் பகுதியில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கொங்கிரீட் பாதைகளையும் பார்வையிட்டு அதனை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழி ஒன்றையும் வழங்கிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இதில் பிரதியமைச்சரின் இணைப்பு செயலாளர் என் எம் மஹ்சூம் ஆசிரியர், ஜனாப் முத்தலிப் ஜே.பீ, ஏ.எம்.எம். பரீட் ஆசிரியர், மற்றும் ஆதரவாளர்கள் பிரதேச பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Published by

Leave a comment