ஏறாவூர்: கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர் அவர்களின் ஏற்பாட்டில் ஏறாவூரிலுள்ள 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு நேற்றயதினம் (13) ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சுபைர் ஹாஜியார் பவுண்டேசன் பிரதி தலைவர் ஜௌபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர், அல் ஹிக்மா நிறுவன உதவி பணிப்பாளர் ஜனாப் எம்.ஏ. ஜாபிர் இபிரதேச மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நஸீர், ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் அல்ஹாஜ் அப்துல் ரஷீத், ஆட்டோ சங்க தலைவர் அப்துல் வகாப் ஆகியோரோடு பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கான குடிநீர் இணைப்புக்குரிய காசோலைகள் வழங்கி வைத்த பின்னர் உரையாற்றிய பிரதி தவிசாளர் சுபைர்,
ஏறாவூரில் பெரும்பாலான மக்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் எமது அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்படவில்லை.
இன்று இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் இல்லாத அளவு எமதூரில் மாத்திரம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் குவிந்து கிடக்கின்றது என்பதை பார்த்து சந்தோசப்படுவதை விட, இவர்களால் இம்மக்கள் பயனடயவில்லையே என்ற கவலைதான் என்னுள் மேலோங்கி இருக்கிறது.
சென்ற ஆட்சியில் ஒரு கெபினட் அமைச்சர், மாகாண அமைச்சர், மாகாணசபை பிரதி தவிசாளர், நகரபிதா என்று அலங்கரிக்கப்பட்டு இருந்த ஏறாவூர், இன்றைய ஆட்சியில் மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், மாகாண பிரதி தவிசாளர், மாகாணசபை உறுப்பினர் என்று மேலும் சிறப்படைந்து காணப்படுகிறது.
இத்தனை பதவிகளையும் அல்லாஹ் எமக்கு அமானிதமாக தந்துள்ளான். இப்பதவிகளைக்கொண்டு எமதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க பாடுபடவேண்டும் என்று குறிப்பிட்டார்.
Published by



Leave a comment