காத்தான்குடி: கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தோர்தல் எவ்விதமான அரசியல் பின்புலமும் இல்லாத என்னை முன்னால் பிரதி அமைச்சர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சார்பாக போட்டியிடுமாறு கூறிய போது முதலில் விருப்பமின்மையினால் மறுத்த போதும் பலரது வேண்டுகோளின் பேரில் பல தரப்பட்ட நியாயமான மற்றும் சமுக சிந்தனையுடனான
கருத்துக்களும் ஆலோசனைகளும் எனக்கு வழங்கப்பட்ட போது அவைகள் நல்ல பல நோக்கங்களை சமுதாய ரீதியாகக் கொண்டிருந்ததனால் நான் அதனை ஏற்றுக் கொண்டு தோ;தலில் போட்டியிடுவதற்கான சம்மதத்தினை தொpவித்தேன்.
எனது அரசியல் பிரவேசம் தொடாபாக என்னால் மூன்று நிபந்தனைகள் முன்வைக்கப்பட்ட போது அவைகளை முன்னால் பிரதி அமைச்சார் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் எவ்வித மாற்றுக் கருத்துமின்றி ஏற்றுக்கொண்டார்
அவைகளாவன:
1.நான் அரசியலிலே சுயமாகவும், சுயாதீனமாகவும் செயற்படுவதற்கு சகோதரர் ஹிஸ்புல்லாஹ் எவ்வகையிலும் தலையீடுகளை மேற்கொள்ளக் கூடாது.
2.நான் சமுக நோக்கோடு சமுக நலன் கருதி எடுக்கும் எவ்வித முன்னெடுப்புக்களிலும் ஹிஸ்புல்லாஹ்வின் தலையீடுகள் இருக்கக் கூடாது.
3.மார்க்கத்திற்கும், அரசியலுக்குமிடையிலான ஒரு போராட்டம் வரும் போது அதில் மார்க்கத்திற்காகவே நான் செயற்படுவேன் அவ்வாறான ஒரு சூழ்நிலையில் நான் மார்க்கத்திற்காக அரசியலில் இருந்து ஒதுங்கும் ஒரு சூழல் ஏற்பட்டாலும் என்னை எவ்வகையிலும் நிர்ப்பந்திக்கக்கூடாது.
அதன் பின்னர் எமது பிரதேசத்திலே எனது அரசியல் நடவடிக்கைகளை என்னால் முடிந்தளவு சமுக அக்கறையோடு அல்லாஹ்வுக்குப் பொருத்தமான அடிப்படையில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக செய்து கொண்டு வருகின்றேன்.
இச்சந்தர்ப்பத்தில்தான் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னா; நான் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ அவர்களை ஆதரிப்பதில்லை என்ற விடயத்தில் மிகவும் தெளிவாக இருந்தேன். அச்சந்தர்ப்பத்தில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக எமதூருக்கு அழைத்து வந்த போதும் கூட நான் அக்கூட்டத்தினை பகிஸ்கரித்து அந்நிகழ்வில் கலந்து கொள்ளாது தவிர்ந்து கொண்டேன். மட்டுமல்லாமல் நான் சார்ந்திருந்த அரசியல் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை கூட அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது…? என்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுத்திருக்காத சந்தர்ப்பத்தில் தலைமைக்கு எதிராகவே எனது நிலைப்பாட்டை எடுத்திருந்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் நான் அமைதியாக இருக்கப்போவதாகவோ அல்லது எவருக்காகவும் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்றோ சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களைச் சார்ந்த அரசியல் மத்திய குழுவிடம் எச்சந்தர்ப்பத்திலும் நான் கூறவில்லை. இது முழுக்க முழுக்க எமது சமுதாய நலன் கருதி சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களோடு ஆரம்பத்தில் இணையும் போது பேசப்பட்ட நிபந்தனைகளில் அடிப்படையில் என்னால் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவே கடந்த ஜனாதிபதித் தேர்த்ல்லில் தற்போதய ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களை ஆதரிப்பதென்ற தீர்மானமாகும்.
அச்சந்தர்ப்பத்தில் நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினது ஒரு உறுப்பினராக இருந்தபடியாலும், நான் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திபால சிறிசேனாவை கட்சியும் ஆதரிப்பதென்று முடிவெடுத்ததனாலும் சமுகம் சார்ந்த நல்ல விடயங்களுக்கு கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களோடு இணைந்து செயற்பட்டேன்.
இது இவ்வாறு இருக்க 25 வருடகால விடுதலைப் புலிகளின் கொடிய யுத்தத்தில் முஸ்லிம் சமுகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், இழப்புக்களுக்கும் எந்தவொரு தமிழ்த் தரப்பும் விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலும் சரி அல்லது யுத்த முடிவுற்ற காலத்திலும் சரி எவ்விதமான ஒரு கண்டனத்தையோ அல்லது அது விடயமான ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையோ முஸ்லிம் சமுகத்திற்காக மேற்கொள்ளவில்லை என்பதை நாம் மிகவும் தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும். இன ஐக்கியம், இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு என்பதும் இரு சமுகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட வேண்டும் அதன் மூலம் அந்த சமுகங்கள் அதனை உணர வேண்டும்.
இதற்காக சமுகத் தலைமைகள் தமது சகோதர சமுகத்திற்கு ஒரு அநீதியோ அல்லது ஒரு இழப்போ ஏற்படும் போது அதனை மேற்கொண்டவர் தமது சமுகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அதனைத் தட்டிக்கேட்கும் போதுதான் சகோதர சமுகத்திற்கு அந்த சமுக ஐக்கியத்தை உணரமுடியுமே தவிர வேறு எந்தவொரு அடிப்படையிலும் உணர முடியாது என்பதனையும் நாம் அனைவரும் புhpந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்டையில் தான் முஸ்லிம் சமுகம் கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சார் நியமனத்தினையும் நோக்குகின்றது என்ற விடயத்தினையும் அனைத்துத்தரப்பும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் புரிந்துகொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் வழங்கப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்த போதிலும் அவ்வாக்குறுதியானது நிறைவேற்றப்படாமல் தமிழ் சகோதரரான சிவனேசதுறை சந்திரகாந்தன் என்பவருக்கு வழங்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்திலும் கூட முஸ்லிம் சமுகம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி அமைதி காத்துக்கொண்டுதான் இருந்தது. அதன் பிற்பாடு 2012ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் சமுகத்தைச் சார்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியினை வழங்குவதற்கு தமிழ்த்தரப்பு முதலில் சம்மதம் தொpவித்த போதிலும் தற்போது முஸ்லிம் சமுகத்தின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமுகத்துக்கெதிரான அதிருப்திகளை வெளியிடுவதனால் இவைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு அரசியல் ரிதியான அச்ச சூழ்நிலையினை உருவாக்கியிருக்கிறது.
இன்று விட்டுக்கொடுப்பைப் பற்றி பேசும் தமிழ் தலைமைகள் இது இரண்டு சமூகங்களுக்கும் பொருந்தக்கூடியது என்ற விடயத்தனை மறந்து அவர்களது சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தி தங்களது கருத்துக்களை தொpவித்துக் கொண்டிருக்கிறர்கள். இதனால் இரு சமுகங்களுக்கும் மத்தியில் உள்ள உறவுகள் சீர்குலையக் கூடிய சாத்தியக்கூறுகளும் அதிகமாகவே காணப்படுவதனை இவர்களது செயற்பாடுகளிலிருந்து காணக்ககூடியதாக இருக்கிறது. இவைகளைப் பற்றி இந்த இடத்திலே நான் அடுக்கடுக்காக கூறிக்கொண்டே போகலாம். இருந்த போதிலும் உண்மைத்தன்மையினை எம் சமூகம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில விடயங்களை மாத்திரம் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
முக்கியமாக மண்முனைப்பற்றில் நடைபெறும் காணிப்பிரச்சனை, காத்தான்குடி எல்லைப் பிரச்சனை ஆகியவைகளை எடுத்து நோக்கும் போது இதில் அவர்களால் எவ்வித விட்டுக்கொடுப்புக்களையும் செய்யத்தயாரில்லை. இதற்கு உதாரணமாக எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு சொந்தமான கர்பலா காணியினை அத்துமீறி சவக்காலையொன்றினை அமைத்ததுடன் அதனை அரச காணியென்று உண்மைக்குப் புறம்பாக வாதாடி இரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை சவக்காலையாக மாற்றியிருக்கிறர்கள்.
தற்போது இருக்கும் காத்தான்குடி எல்லை விவகாரத்தில் பெரிய தோனா என நாம் அடையாளப்படுத்தியிருப்பது பெரிய தோனாவே அல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் வாதாடி வந்த நிலையில் தற்போது அது எமக்குச் சொந்தமான பெரிய தோணாவே தான் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் காத்தான்குடிக்கு சொந்தமான 248 ஏக்கர் அளவிலான காணி மண்முனை வடக்கு பகுதியினுள்ளும், கிட்டத்தட்ட 200 ஏக்கர் அளவிலான காணி மண்முனைப்பற்று பகுதியினுள்ளும் இருப்பதாக உத்தியோகபூர்வமாக அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும் கூட அதனை எமது காத்தான்குடி பிரதேசத்துக்கு வழங்காமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கு சொந்தமான காணி மண்முனைப் பற்று பிரதேச எல்லைக்குள் இருந்தும் அதில் எங்களது குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுவதற்கும் அதனை மீழ்சுழற்சி முறையில் வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கும்; தடைவிதித்திருக்கிறார்கள்.
தங்களுக்கு என்று சொந்தமான காணியில் கூட மலசல கூடங்களைக் கட்டுவதற்கும், மின்சார வசதிகளைப் பெறுவதற்கும், தண்ணீh; வசதிகளைப் பெறுவதற்கும் அதிகளவிளான தடைகள் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்படுகின்ற நிலைப்பாடு மிகக்கூடுதலான காலமாக மண்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
அண்மையில் எங்களது தாயக பூமியென்று பரம்பரை பரம்பரையாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சிகரம் பிரதேசத்தில் ஏழை மக்களுக்காக அமைக்கப்பட்டு அவர்களுக்கு பகிர்ந்தளிக்கவென ஏற்பாடுகள் செய்யப்பட்ட வீட்டுத்திட்ட செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே ஊக்கப்படுத்தினார்கள்.
இதேபோன்றே முஸ்லிம்களின் தாயக பூமிகளான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உன்னிச்சை, உறுகாமம், வடிச்சல், கித்துள் போன்ற பல இடங்களில் இவர்கள் தொடர்ச்சியாக பல தடைகளை விதித்து வந்து கொண்டேயிருக்கிறார்கள்.
இவ்விடத்தில் நாம் தெளிவாக பார்க்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளைப் பற்றி நாம் பேசும் போது அதனை தமிழ் தரப்புக்கள் இனவாதம் பேசுவதாகவும் கூறுகின்ற அதே வேளை இதே விடயத்தினை அவர்கள் பேசும் போது அவர்களது உரிமைகளைப் பற்றி பேசுவதாகவும் கூறுவது நகைப்புக்குரிய விடயமாகவே இருக்கிறது.
மேற்சொன்ன விடயங்கள் தற்போதைய எமது நாட்டின் அரசியல் சூழ்நிலைகளில் மறக்கவேண்டியதாகவோ அல்லது மன்னிக்கப்பட வேண்டியதாகவோ இருக்கிறது என்ற வாதம் இருக்கின்ற போதிலும் தமிழ் தரப்புக்கள் இனிமேலும் இவ்வாறான இனங்களைப் பேதப்படுத்துகின்ற அல்லது இனவாதங்களைத் தூண்டுகின்ற விடயங்களிலிருந்து இரு சமுகங்களையும் ஐக்கியத்துடன் வாழ வைப்பதற்குhpய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
எனவே எமக்கென்று இம்முறை கிடைக்கும் சமுக ரிதியான அரசியல் உரிமையாகிய கிழக்கு மாகாண சபையினுடைய முதலமைச்சர் எனும் அதிகாரத்தை இன்னுமொரு சமுகத்திற்கு தாரை வார்த்துக் கொடுப்பது மாத்திரமின்றி எமது உரிமைகளை இன்னும் இல்லாமலாக்குவதற்கு நாங்கள் அவர்களுக்கு வழங்கும் ஒரு சந்தர்ப்பமாகவே கருத வேண்டியிருக்கிறது. இதனை இன ரிதியாகப் பார்க்காமல் எமது சமூகம் இதனை எனும் பதவியானது வெறுமனே முஸ்லிம் சமூகத்தின் கோ‘ம் மாத்திரமல்லாமல் இது எமது உரிமை என்பதிலும் எவ்வித ஐயப்பாடுகளும் கிடையாது.
நிலமை இவ்வாறு இருக்க கடந்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தேர்வில் மேற்சொன்ன பிரச்சனைகள் அனைத்தினையும் அறிந்திருந்த நான், அதே போன்று பல தரப்பட்ட பிரச்சனைகளோடு நேரடியாகவே தொடர்புபட்டிருந்த நான் எம் சமுகத்திற்கு முதலமைச்சர் நியமிக்கும் விடயத்தில் எந்த விதமான அநீதிகளும் இடம்பெற்று விடக்கூடாது என்ற விடயத்தில் மகிவும் அவதானமாகவும், உன்னிப்பாகவும் செயற்பட்டேன். அந்தத் தருனத்தில் தான் எவ்வாறு ஆட்சியதிகாரங்கள் பகிந்தளிக்கப்படவிருக்கின்றது என்ற நிலைப்பாட்டினை நான் சார்ந்த கட்சியாகிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக அவதானித்தபோது அவர்கள் பல வகையான அரசியல் காய் நகர்த்தல்களையும், வியூகங்களையும் தங்களது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சியினுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் நான் சார்ந்த கட்சி என்னை ஒரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய உறுப்பினர் எனது நண்பர் தயா கமகே அவர்களை முதலமைச்சராக்க சம்மதம் தொpவித்து கையொப்பமிடச் சொன்ன போதும் கூட நான் அவ்வுடன்பாட்டினை ஏற்றுக்கொள்ளாமல் அதிலிருந்து விலகிக்கொண்டேன். மாத்திரமின்றி எவராக இருந்தாலும், எக்கட்சியாக இருந்தாலும் முதலமைச்சராக வருபவா; இம்முறை ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியுடன் இருந்தேன்.
இச்சந்தர்ப்பத்தில்தான் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெறவேண்டுமாக இருந்தால் அது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை உள்ளடக்கினால் தான் சாத்தியமாகும் என்கின்ற ஒரு நிலைப்பாடு தோற்றம் பெறுவதை நான் உணர்ந்தேன். ஏனென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியினை ஆட்சி அமைப்பதற்காக யாh; இணைத்துக் கொண்டாலும் அவர்களது கோhpக்கையாக முதலமைச்சர் பதவி தங்களுக்கே வழங்கப்படவேண்டும் என்ற ஒரு நிபந்தனை காணப்பட்டது. இதன் போதுதான் நான் எம் சமுக்திற்கு கிடைக்கவிருக்கும் ஒரு அரசியல் உரிமை வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது அல்லது விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்ற சமுக நோக்கோடு சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அணியினருக்கு நான் சார்ந்திருந்த கட்சியாகிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்தே எவ்வித நிபந்தனைகளும் இன்றி, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி என்னுடைய கட்சியினுடைய தலைமைத்துவத்துடனும் கூட கலந்தாலோசிக்காமல் எனது பூரண ஆதரவினைத்தொரிவித்தேன்.
இதன்பிறகு எனது கட்சியின் தலைமை கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் என்னை உடனடியாக கொழும்புக்கு அழைத்து நான் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கிய ஆதரவினை மீளப்பெறுமாறு மிகவும் பாhpய அழுத்தங்களை கொடுத்த போதும் கூட நான் அதனை மீளப் பெறவில்லை. காரணம் அவ்வாறு நான் எனது ஆதரவினை மீளப்பெறுவதன் மூலம் முஸ்லிம் சமுகத்திற்குhpய முதலமைச்சர் எனும் அரசியல் உhpமை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் எம் சமுகத்தின் எதிர்கால நலன் கருதி என் முடிவில் உறுதியாக இருந்தேன்.ஆனாலும் இவர்களின் அழுத்தம் எல்லை கடந்துசென்றதன் விளைவாக எவ்வாறு நான் சாh;ந்திருக்கும் அரசியல் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து எனது அரசியல் பயணத்தினை தொடர்ந்து செல்வது என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
இதே சமயம் அண்மையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தான் அமைச்சர் ஹக்கீம் சார்ந்த சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே முதலமைச்சரை வழங்க வேண்டும் என உறுதியாக இருந்ததாகக் கூறியிருந்தார். அவ்வாறு அவர் கூறியது உண்மையாக இருந்திருக்குமாக இருந்தால் ஏன் நான் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கிய முதலமைச்சர் தெரிவுக்கான ஆதரவினை மீளப் பெற வேண்டும் என்ற நியாயமான கேள்வி என்னுள் எழுகின்றது.
காரணம் எனது செயற்பாடானது அமைச்சர் றிஷாட் அவர்களின் விருப்பமாகவே அமைந்திருந்திருக்கிறது. எனவே இருவரது நோக்கங்களும் ஒரே அடிப்படையில் இருக்கும் போது நான் வழங்கிய ஆதரவினை மீளப்பெறுமாறு தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிப்பதில் எவ்விதமான நியாயங்களையும் என்னால் அவதானிக்க முடியவில்லை. இதனால் இதன் பின்னனியில் ஏதோ உள்நோக்கங்கள் இருப்பது மிகத்தெளிவாக எனக்குப் புலப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நான் நடந்து கொண்டவிதம் சரியானதா? அல்லது தவறானதா? என்பதை நான் மேற்சொன்ன விடயங்களில் இருந்து எம் சமுகம் தெளிவாகப்புhpந்து கொண்டிருக்கும் என நான் நம்புகின்றேன்.
மாத்திரமன்றி தற்போதைய அரசியல் கட்சிகளுடைய நிலவரங்களைப் பார்க்கும் போது மத்திய அரசில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே கொண்ட ஒரு கட்சியாக இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தமக்குhpய இரண்டு பாராளுமன்ற ஆசனங்களுக்கும் ஒரு முழு அமைச்சினையும், ஒரு பிரதி அமைச்சினையும் பெற்றிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையில் தங்களுக்கிருக்கும் ஆசனங்களுக்கு தற்போதைய ஆட்சியமைப்பின் அடிப்படையில் எதுவித அமைச்சுக்களும் கிடைக்க வாய்ப்பிருக்காது என்பதனை அடிப்படையாகக் கொண்டு மாற்று வழிமுறைகளை கையாண்டு மாற்றுமத சகோதரர் ஒருவர் முதலமைச்சராக வந்தாலும் தங்களுக்கு அதனூடாக அவர்களை ஆட்சிப்பீடமேற்றிய பெருமையோடு ஒரு மாகாண அமைச்சினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் இவா;களது செயற்பாடுகள் அனைத்துமே அமைந்திருந்தது. இருந்தும் பெறப்படும் அமைச்சுப் பதவியானது எனக்கே வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தினை எனது உயா;பீட உறுப்பினர்கள் கட்சித் தலைமையை சந்தித்த போதும் அதன் பின்னர் காத்தான்குடியிலே என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வின் போதும் வெளிப்படையாகவே கூறப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்.
இவ்வாறு அமைச்சுப்பதவிக்கு ஆசைப்பட்டு எம் சமுகத்திற்குரிய மாகாண சபையின் முதலமைச்சர் பதவியினை மாற்றுமத சகோதரர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் எவ்வித சுயநல அரசியலும் என்னிடத்தில் இருக்காத காரணத்தினால் நான் சார்ந்த கட்சியினது இந்த திட்டமிட்ட செயற்பாடானது கைநழுவிப்போனது.
எனவே நான் தொடர்ச்சியாக எனது அரசியல் பயணத்தில் மக்கள் நலன் தொடர்பில் எனது வேலைத் திட்டங்களை செய்ய வேண்டுமாக இருந்தால் நான் சார்ந்திருக்கும் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எந்தளவுக்கு ஆதரவு வழங்கும் என்ற சந்தேகம் என்னில் பலமாக எழுந்திருக்கின்றது.மாத்திரமின்றி அண்மைக்கால அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடக அறிக்கைகளை மையமாகக் கொண்டு ஒரு விடயத்தினை மக்களுக்கு தெளிவு படுத்தலாம் என நினைக்கின்றேன். அதாவது கடந்த 2012 இல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்லில் முதலமைச்சர் பதவி எமக்கு வழங்கப்பட வேண்டும் என அப்போதைய ஜனாதிபதியிடம் எமது தலைமைகேட்ட போது தங்களுக்கு பாராளுமன்ற ஆசனமும், பிரதி அமைச்சுப்பதவியும் வழங்கப்படும் எனக்கூறியதனாலேயே மாகாண சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என்பதனையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வெறுமனே பதவிகளுக்காக எமது சமுதாய மக்களால் எமக்கு அமானிதமான வழங்கப்பட்ட பதவிகளை எமது சுயலாபங்களுக்காகவும் எமது எதிர்கால அரசியல் இருப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்தமுடியாது என்கின்ற விடயத்தில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். அதே போன்று எனது எதிர்கால அரசியலினை சமுக நோக்கோடு செய்ய வேண்டுமாக இருந்தால் ஒரு பலமிக்க அரசியல் கட்சியொன்றுடன் இணைந்து செயற்படவேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிலை கூடத் தோன்றலாம் என்ற நிலைப்பாடு என்மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே மேலே என்னால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களையும் தெளிவாகவும் நிதானமாகவும் வாசித்து விளங்கிய பின் தங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டு எனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தங்களது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எனது அரசியல் செயற்பாடுகள் சமுகத்திற்கும் அல்லாஹ்விற்கும் பொருத்தமானதாக இருந்தால் எனது செயற்பாடுகளுக்கு ஆதரவளியுங்கள். அல்லது அல்லாஹ்விற்கு பொருத்தமில்லாத சமுக நலன் சாராத அரசியல் நடவடிக்கைகளை என்னில் நீங்கள் அவதானிக்கும் போது இந்த அரசியலில் இருந்து என்னைத் ஓரம்கட்டுவதற்கு நீங்கள் ஒருபோதும் தயங்கக்கூடாது என்பதனைக் கேட்டு விடைபெறுகின்றேன்.
இப்படிக்கு
முஹம்மட் ஷிப்லி பாறூக்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
தொடர்புகளுக்கு:Address: No 71, Hutha Lane, Kattankudy -03
E-mail : Shiblyfarook2014@gmail.com
Face Book: Shibly Farook Mohamed
Mobile: 0777806270
Published by

Leave a comment