– பழுலுல்லாஹ் பர்ஹான், டீன் பைரூஸ்
பாலமுனை: பாலமுனை பிரதேசத்தில் 13-02-2015 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மேற்படி ஆர்ப்பாட்டம் கர்பலா பாலமுனை வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கையில் 1977ம் ஆண்டு காத்தான்குடி பாலமுனைக்கான உறவுப் பாலமாக திறந்து வைக்கப்பட்ட கர்பலா வீதியானது 1990ற்குப் பிறகு இன்றுவரை சீரற்றுக் காணப்படுவதாகவும் எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும்கூட இவ் வீதியைப் புனரமைப்பதற்கு எவரும் முன்வரவில்லையெனவும் ,இவ் வீதியால் பாலமுனையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தினமும் பஸ் சேவை இடம்பெறுவதாகவும் ,இதில் கர்ப்பிணித் தாய்மார்கள்,நோயாளிகள் ,வயோதிபர்கள் என பலரும் பயணிப்பதாகவும் இந்த வீதியில் காணப்படுகின்ற குன்றும் குழியுமான நிலை இவர்களை மேலும் நோயாளிகளாக்கி வருவதாகவும் ,இவ் வீதி தொடர்பில் கடந்த தேர்தல் காலங்களில் கர்பலா வீதி புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் மேடைகளில் கூறப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன ஆனது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் பதிலலிக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
இங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் உடனடியாக கர்பலா வீதியை புனரமைத்து தரவும்,பொய்யான வாக்குறுதி வேண்டாம்,வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே?,கர்பலா வீதி புணர்நிர்மானம் நடக்குமா ? பா.உ ஹிஸ்புல்லாஹ் அவர்களே,மா.உ சிப்லி பாரூக் அவர்களே பதில் கூறுங்கள் போன்ற பல்வேறு தமிழ் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த இடத்திற்கு வருகைதந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் முபீனுக்கு மஹஜர் கையளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த முபீன்; இவ்வீதி அபிவிருத்தி தொடர்பில் நிதி ஒதுக்கப்பட்டதா? இல்லையா? என்பது தனக்கு தெரியாதெனவும் தெரிவித்ததோடு இவ் வீதி தொடர்பில் தான் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசீமோடு கதைப்பதாகவும் தெரிவித்தார்.
இவ் ஆர்ப்பாட்டம் பாலமுனை ஜாமிஉல் ஹஸனாத் ஜூம்மா பள்ளிவாயலிருந்து கர்பலா பொலிஸ் காவலரன் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழுவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
Published by




Leave a reply to m rislan Cancel reply