‘கணினியில் சேமிக்கப்பட்டவை முற்றாக அழிந்துபோகலாம்’

computer-repair[1]கலிபோர்னியா: கணினிகளின் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் வழக்கற்றுப் போவதால், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஒட்டு மொத்தமாக இல்லாமல் போகும் ஆபத்து இருப்பதாக இணையத்தின் நிறுவனர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் யுகத்தில் வாழப்போகும் எதிர்கால சந்ததிக்கு, ஒரு இருண்ட யுகமாக இருக்கும் என்று இவரால் வர்ணிக்கப்படும் 21ஆம் நூற்றாண்டின், பதிவுகள் முற்றாகவோ, பெருமளவிலோ கிடைக்காமல் போகலாம் என்று கூகிள் நிறுவனத்தின் தற்போதைய துணைத் தலைவரான விண்ட் சேர்ஃப் கூறியுள்ளார்.

கணினி கருவிகள் மற்றும் மென்பொருட்களை என்றும் அழியாமல் இருக்கும் வகையில் டிஜிட்டலுக்கு மாற்றி பாதுகாப்பதற்கான ஒரு திட்டம் குறித்து கலிபோர்னியாவில் நடந்த ஒரு அமெரிக்காவின் மிகப்பெரிய விஞ்ஞான மாநாட்டில் அவர் பரிந்துரைத்துள்ளார்.

Published by

Leave a comment