அடிலெய்ட்: உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் இல்லாத இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதுவரை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டிகள் அத்தனையும் இந்தியா வெற்றி பெற சச்சின் முதுகெலும்பாக இருந்த நிலையில், அவரது இடத்தை ஈடுகட்டும் வீரர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் முதலில் 1992ம் ஆண்டு உலக கோப்பை தொடரில்தான் மோதலை ஆரம்பித்தன. சச்சினுக்கும் அதுதான் முதல் உலக கோப்பை தொடராகும். அப்போட்டியில் 54 ஓட்டங்கள் எடுத்து ‘அவுட்’ ஆகாமல் இருந்த சச்சின், அமிர் சொகைல் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதும் சச்சினுக்கே கிடைத்தது. ஆஸியில் நடந்த அந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றபோதிலும், இந்தியாவிடம் பெற்ற தோல்வியை அவர்களால் மறக்க முடியவில்லை.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மற்றுமொரு உலகக் கிண்ணப்போட்டி உலகில் அதிக மக்கள் பார்க்கும் போட்டியாக பதிவு வெய்யப்பட இருக்கிறது.
இந்தப் போட்டி இருநாடுகளுக்கும் மிக முக்கிய வரலாற்றுப் போட்டியாக அமைகிறது.
Published by


Leave a comment