காத்தான்குடி: காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் தளபாடங்கள் இல்லாத காரணத்தால் இயங்காமல் இருந்துவந்த பாடசாலை நூலகம் மாணவர்களின் வசதி கருதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தளபாடங்கள் வழங்கப்பட்டு 13-02-2015 இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.ஹகீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி நூலகத்தை நாடா வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் உப அதிபர்களான அமீன், ஜனாபா மாஹிரா, பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் ஏ.ஆர்.எம். றஸீத் உட்பட ஆசிரிய ஆசிரியர்கள், மாணவர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலை நூலகம் அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் 2015 கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் தளபாடங்கள் வழங்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment