வாழைச்சேனை: மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின் பிறைந்தறைச்சேனைப் பகுதியில் பாடசாலை மாணவன் 12-02-2015 வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமானார்.
பிறைந்துறைச்சேனை பன்சலை குறுக்கு வீதியில் வசிக்கும் ஹயாத்து முஹம்மது றிஸ்பாத் என்ற பிறைந்துறைச் சேனை வாதுலியா வித்தியாலய மாணவரே இவ்விதம் பரிதாபகரமாக மரணமானார்.
குறித்த மாணவன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக வைத்திய வைத்திய சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று மாலை மரணமானார்.
Published by

Leave a comment