அல்-ஹிறா மாணவர்களுக்கு சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு

alhira scout– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி-05,  அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் சாரணர்களாக தெரிவு செய்யப்ட்ட மாணவர்களுக்கு சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு 12-02-2015 இன்று வியாழக்கிழமை அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.ஹகீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,மட்டக்களப்பு மாவட்ட சாரணர் இயக்கத்தின் ஆணையாளர் ஈ.பி.ஆனந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட சாரணர் இயக்கத்தின் தலைவர்களான பி.மேகவண்ணன்,எம்.ஐ.எம்.முஹ்ஸின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சாரணர்களாக தெரிவு செய்யப்ட்ட 18 மாணவர்களுக்கு அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் சாரணர் இயக்கத்துக்கு பொறுப்பான ஆசிரியர் ஏ.எல்.ஏ.கையூமினால் சாரணர் சின்னம் சூட்டப்பட்டது.

இங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் உப அதிபர்களான அமீன்,ஜனாபா மாஹிரா உட்பட ஆசிரிய ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

alhira scout

alhira (2)

alhira (3)

alhira

Published by

Leave a comment