ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் -அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது மாபெரும் விழா

saleh madrasa azar moulavi– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி-02, ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது மாபெரும் விழா 13-02-2015 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறும். ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம். அஸார் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு

மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) கலந்து கொள்ளவுள்ளார்.

saleh madrasa azar moulavi
மௌலவி எம்.எஸ்.எம். அஸார்

இதில் மாணவர்களின் நிகழ்ச்சிகள், அல்குர்ஆனின் அற்புதம் பற்றிய அறிவுரைகள்,தரம் 3ல் அல்குர்ஆனை முடித்த ,புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை கௌரவித்தல்,உயர் நிலை அடைந்த மதரஸா மாணவலர்களை கௌரவித்தல் ,அதி உயர் கௌரவ விருது வழங்கி கௌரவித்தல் போன்ற பல்வேறு கௌரவிப்பு நிகழ்வுகளும்,இஸ்லாமிய கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment