வாக்கடிப்படையில் முதலமைச்சு கொடுக்கப்படுமென்றால் அதற்கு தகுதியானவன் நானே: மாகாண சபை உறுப்பினர் தவம் (காணொளி)

thawamஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் அதிகூடிய விருப்பு வாக்குகளான 33,000 விருப்பு வாக்குகளை பெற்றதும் மட்டுமல்லாமல் சகோதரர் ஜெமீலை விடவும் தான் பெற்ற விருப்பு வாக்குகள் கூடுதலாகும். அந்த வகையில் முதலமைச்சுப் பதவி விருப்பு வாக்கடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்குமானால் எனக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, சென்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சிராஸ் மீராசாஹிப்பும், சட்டத்தரனி நிசாம் காரியப்பரும் போட்டியிட்டனர்.

ஆனால் கட்சியின் தலமையானது சாந்தமருக்கோ அல்லது கல்முனைக்கோ மேயர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை. மாறாக அதிகூடிய விருப்புவாக்குகளை பெறுபவர் முதல்கட்டமாக இரண்டரை வருடங்கள் மேயர் பதவிய வகிக்க முடியும் என்பதாகவும் அதற்குப் பிறபாடு அடுத்த இரண்டரை வருடங்கள் இரண்டாவதாக விருப்பு வாக்குகளை பெறுபவர் மேயர் கதிரையில் உட்கார முடியும் என்ற வாக்குறுதியை அளிக்கப்படதே தவிர இரண்டு ஊர்களுடைய பிரச்சனை கிடையாது.

அந்த வகையில் கட்சி என்ற விடயம் இருப்பதனால் கட்சியும் தலைமையும் எடுக்கின்ற முடிவில் சாதகமான விடயத்தை எதிர்பாக்கலாம் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக்கொள்வதற்குறிய மனப்பக்குவம் எல்லோருக்கும் இருத்தல் அவசியமாகும். சகோதரர் ஜெமீல் அவர்களிடம் சிறிது தடுமாற்றம் இருந்தது. ஆனால் தற்போது அவர் தடுமாற்றத்தினை விளங்கியவராக பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார். அதனடிப்படையில் மீண்டும் அந்த பிரச்சனைகளை கிளறிக் கொண்டு பிரச்சனையாக வெளியில் காட்டுவதற்கு நாங்களும் கட்சியும் அனுமதிக்கப் போவதில்லை எனவும், சிறிய பிரச்சனையான அந்த பிரச்சனை பூதாகரமாக வெளியில் காட்ட முட்படுவதானது இன்னுமொரு அரசியல் நோக்கமே தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

ஜெமீல் அவர்களுக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி தருவதாக வாக்குகுறுதி அளிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டது சம்பந்தமாகவும் கட்சியின் தலைமையினால் சாய்ந்தமருது பிரதேசம் புறக்கணிக்கப்படுவது சம்பந்தமாக கேட்கப்பட கேள்விகளுக்கு இணைய நாளிதல் வாசகர்களுக்காக பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு மாகாணா சபை உறுப்பினர் தவம் தெரிவித்தார். மேலும் கேட்கப்பட்ட

கேள்விகளுக்கன பதில்களும் காணொளியும் எமது இணையதள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Published by

Leave a comment