பயங்கர தூசு மண்டலம்” ஈரானின் 7 நகரங்களில் பள்ளிகள்,அலுவலகங்கள் மூடல்!

iran– SHM

டெஹ்ரான்: ஈரானின் தென் மேற்கில் உள்ள கோசஸ்தான் மாகாணத்தில் பயங்கர காற்று மாசு காரணமாக 7 நகரங்களில் பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. வெளியில் வர முடியாத அளவுக்கு அங்கு தூசு மண்டலம் நிலவியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஈரானின் கோசஸ்தான் மாகாணத்தில் நீர் மேலாண்மை சரிவர செய்யப்படாத காரணத்தால் மாசு அதிகரித்து விட்டது. தற்போது அங்கு அபாயகரமான அளவில் காற்று மாசு காணப்படுகிறது. மூ்ச்சு விடக் கூட முடியாத அளவுக்கு காற்று மாசு இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தலைநகர் அவாஸ், அபடான், கோரம்ஷர் உள்ளிட்ட 7 நகரங்களில் பள்ளிகள், அலுவலங்களை மூட மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.சில நகரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 66 மடங்கு அதிக அளவில் காற்று மாசு இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.இந்த புழுதி் மாசு மற்றும் தூசு மண்டலத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கோசஸ்தான் மாகாணத்தில் மழை குறைந்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஈராக்இ சவூதியிலிருந்து வரும் தூசி அதிகரித்திருப்பது இன்னொரு காரணம் என கருதப்படுகிறது.

iran

மேலும் நிலப்பரப்பு வறண்டு போயிருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.இந்தப் பிரச்சினை தொடர்பா கோசஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பிக்களுடன் ஈரான் துணை அதிபர் மஸ்ஸோமோ எப்தகர் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு 33 முறை இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இந்த முறை இதுவரை 9 நாட்கள் மட்டுமே இப்பிரச்சினயை கோசஸ்தான் சந்தி்திருப்பதாகவும் துணை அதிபர் கூறியுள்ளார்.

Published by

Leave a comment