– இஸ்லாமிக் சென்ரர், காத்தான்குடி
காத்தான்குடி: தற்போது எமதூரில் மிக வேகமாக பரவிவருகின்ற டெங்கின் பாதிப்பிலிருந்து எமது குழந்தைச் செல்வங்களையும் எம்மையும் பாதுகாத்து ஆரோக்கியான சமூக சூழலை கட்டியெழுப்ப “இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் பேணுவோம்! டெங்கை ஒழிப்போம்!!” எனும் கருப்பொருளில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த டெங்கு தொடர்பாக பெண்களுக்கான
விழிப்பூட்டல் கருத்தரங்கு 09.02.2015 திங்கட்கிழமை பி.ப. 4.00 தொடக்கம் 6.00 மணிவரை புதிய காத்தான்குடி 06 ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், டெங்கு நுளம்பின் பெருக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் எனும் தலைப்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி Dr.UL. நஸீர்தீன் MBBS அவர்களும், உடல், உள, சமூக ஆரோக்கியத்திற்கு இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் எனும் தலைப்பில் ஓட்டமாவடி தாறுஸ் ஸலாம் கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் AL. முஸ்தபா (ஸலாமி) BA அவர்களும் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினர்.
மேற்படி நிகழ்வில், இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள், பொதுச் சுகாதார பரிசோதகர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகத்தின் கீழ் இயங்கும் ஜம்இய்யதுந் நிஸா (பெண்கள் அமைப்பு) இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
Published by





Leave a comment