காத்தான்குடி: கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் கௌரவ, ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கட்கு நல்வாழ்த்துக்களை தெரிவிற்துக் கொள்ளும் அதே நேரத்தில் தங்களது ஆட்சிக்காலத்தில் கிழக்குமண் வழம் பெறவேண்டும். இதற்காக பிரார்த்திப்பதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தந்தை மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்றப் அவர்களினது கனவுகள் காலம் கடந்தாவது இலக்கை அடைந்துவருகின்றன.
நமது நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கின்ற பிரதான சக்தியாகவும் கிழக்கு மாகாணத்தில் எங்களை நாங்களே ஆழவேண்டும் என்றும் கனவினை கொண்டிருந்தார். இதற்கான பயணத்தில் தனது உயிரையும் உரமாக்கினார்.
அன்னாரது மறைவின் பின்னர் குறுநில மன்னர்கள் உருவெடுத்து மு.காவை உருக்குலைத்து சுயநல அரசியலில் குளிர்காய வேண்டும் என நினைத்தாலும் ஒருபோதும் மு.கா விடயத்தில் அவர்களது வித்தைகள் பலிக்கவேயில்லை. ஒவ்வொரு தேர்தல்களிலும் இறைவன் துணையோடு வெற்றிக் கொடியேற்றியே வந்திருக்கிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இது நிரூபனமாகி இருப்பதனை நாம் அறிவோம். மாத்திரமல்லாது பல்வேறு கயிரு இழுப்புகளுக்கு மத்தியிலும் கிழக்கு முதல்வர் பதவி மு.காவின் கரங்களுக்கே கிடைத்திருக்கிறது.
கௌரவ கிழக்கு முதலமைச்சர் அவர்களே !
இது மு.காவிற்கு கிடைக்க வேண்டும் அந்த ஆசனத்தில் தானிருக்க வேண்டும் என மறைந்த தலைவர் அஸ்றப் சேர் அவர்கள் அத்மார்த்தமாக எண்ணம் கொண்டிருந்தார்கள்.
அந்தப்பாக்கியத்தை நமது கௌரவ தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கூடாக எத்தனையோ தடைகளைத்தாண்டியும் இறைவன் உங்களுக்கு வழங்கி இருக்கிறான்.
இதனை உங்களது பதவி உயர்வாக தயவுசெய்து கருதிக்கொள்ளாதீர்கள் இதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் விலை மதிக்கமுடியாத அர்பணிப்புகளை செய்திருக்கிறது. காத்தான்குடி, ஏராவூர், அம்பாறை மாவட்டம், திருக்கோணமலை உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கான உயிர்களை இதற்காக தியாகித்திருக்கிறது
கிழக்கு மாகாணத்து முஸ்லிம்களுடைய ஒட்டுமொத்த பாரிய பொறுப்பை கௌரவ தேசியத் தலைவர் அவர்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து ஒப்படைத்து இருக்கிறார்கள்
இறைவனுக்காக இதனை உங்களின் மேன்மைக்கான பதவி என நினைத்து செயல்பட்டுவிடாதீர்கள். இதனூடான கிழக்க முஸ்லிம்களின் அபிலாசைகளை வென்றெடுக்க பெரும் தியாகிப்போடு உழைக்க முன்வாருங்கள்.
யுத்தம் முடிந்துவிட்டாலும் முஸ்லிம்களுடைய காணிப்பிரச்சினைகள் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் தேங்கிக்கிடக்கின்றன இதற்காக முஸ்லிம் சமூகம் எங்கி நிற்கிறது. நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது.
நல்ல ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள் .எனவே தாங்கள் அர்பணிப்போடு செயல்படுவீர்கள் என்று சமூகம் விளிப்போடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இதற்காக இறைவனை பிரார்த்திக்கிறோம். என மேலும் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
Published by

Leave a comment