திருகோணமலை: சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கெளரவ தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் என்றும் எங்களுடைய கட்சியின் தவிசாளரே. அந்த வகையில் அவரை கெளரவப்படுத்தும் கடமை எங்கள் அனைவருக்கும் உள்ளதோடு அண்டன் பாலசிங்கம் எனப்படும் பெரிய மணிதனாக தன்னை ஒப்பிட வேண்டாம் என்ற கருத்தினை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அண்டன் பாலசிங்கம் என வர்ணிக்கப்பட்ட முன்னால் அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்களின் அரசியல் முன்னெடுப்புக்கள் எதுவாக அமையப் போகின்றது?
என்ற கேள்வி முஸ்லிம் காங்கிரசுக்குள் உங்களின் மீள் வருகைக்குப் பிற்பாடு பரவளாக பேசப்பட்டு வருக்கின்றது.
இந்த அடிப்படையில் அடுத்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அண்டன் பாலசிங்கம் நீங்களா? என்ற கேள்விக்கே கிழக்கு மாகான சபையின் புதிய முதலமைச்சராக அல் ஹாபில் நசீர் அஹமட் நேற்று (10.02.2015) செவ்வாய்க் கிழமை உத்தியோக பூர்வமாக பதவியேற்றதற்குப் பிற்பாடு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உத்தியோக பூர்வமாக முதலமைச்சர் பதவியேற்றதற்குப் பிற்பாடு இடம்பெற்ற சபை அமர்வில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது சமூகமளிக்காத இரண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய 34 ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பூரண ஆதரவுடன் நிரைவேற்றப்பட்டமையானது முக்கிய அம்சமானலும், இதே வரவுசெலவுத் திட்டமானது எதுவித மாற்றமும் இல்லாமல் சென்ற அரசாங்கம் ஆட்ச்சியில் இருக்கும் போது சபையில் சமர்ப்பிக்கபட்ட வேலையில் எத்ரிக்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவளிக்கத் தவரியமை சம்பந்தமாக முன்னால் முதலம்னைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தான் உரையாற்றும் போது சுட்டிக்காட்டினார்.
இவ்வைபவத்தில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சருமான எம்.எஸ். தெளபீக், மாகான சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயளர்கள், அரச அதிகாரிகள், முதலமைச்சரின் ஆதரவாளர்கள் என பெரும்பாளானோர் கலந்து கொண்டனர்.
அஹமட் இர்ஸாட் :- முதலமைச்சராக நீங்கள் பதவியேற்றதற்குப் பிற்பாடு மட்டகளப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்துபவர் என்ற ரீதியில் முதற் கட்டமாக எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்கள்?
முதலமைச்சர் :- எங்களுடைய முதற்கட்ட வேலையாக இன்று என்னுடைய பணிகளை ஆரம்பித்து என்ன வேலைகளை செய்து முடிக்கலாம் என்ற தீர்மானத்தை மட்டும் எடுக்காமல் மாத்திரமல்ல எமது கட்சியின் தேசிய தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களுடனும் கலந்தாலோசித்து ஒட்டு மொத்தமாக இருக்கின்ற பாரிய வேலைத்திட்டங்களை மையமாக வைத்தும், உன்னிச்சை, உறுகாமம் குளங்கள் இணைக்கப்படுவது போன்ற விடயங்களை செயற்படுத்த ஆரம்பிப்பதோடு ஏனைய மாவட்டங்களிலும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இவ்வாற திட்டங்கள் உடனடியாக முன்னெடுக்கப்படும்.
அஹமட் இர்ஸாட் :- பிரதி அமைச்சர் அமீர் அலி அமைச்சினை பொறுப்பேற்றதற்குப் பிற்பாடு தனது முதல் வேலைத்திட்டமாக மாவட்டதில் அரசியல், அரச நிருவாக உத்தியோகத்தர்களால் செய்யப்பட்ட ஊழல்களை கண்டு பிடிப்பதாக தெரிவித்திருந்தார். அவ்வாறாக பிரதி அமைச்சர் அமீர் அலியினால் ஆரம்பிக்கப்டும் அதிரடி வேலைகளுக்கு நீங்கள் புதிய முதலமைச்சர் என்ற வகையிலும் மாவட்டத்தை பிரதிநித்தித்துவப் படுத்துபவர் என்ற ரீதியிலும் பூரண ஒத்துளைப்பு வழங்குவீர்களா?
முதலமைச்சர் :- என்னுடைய பார்வையில் பிரதி அமைச்சர் கூறியது ஒரு வேலைத்திட்டமாக நான் நினைக்கவில்லை. அதனை மத்திய அரசாங்கம் முன்னெடுத்தே வருக்கின்றது. இரண்டாயிரத்துக்கும் மேலான பைல்கள் இன்னும் முடிக்கப்படாமல் அரசாங்கமும், JVP யும் தடுமாறிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இவ்வாறான வேலைத்திட்டம் தேவையில்லை என்றே நினைக்கின்றோம்.
Published by


Leave a comment