அம்பாறை: முதலமைச்சர் சம்பந்தமாக ஒரு கிழமையாக தீர்மானம் எடுப்பவர்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய தவராக காட்ட முட்பட்டார்கள். ஆனால் கட்சியின் போரளிகளும் உயர்மட்டத்தினரும் இதற்கு ஆதரவாக உள்ளார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றியே எமது கட்சியின் சார்பாக கிடைத்த முதலமைச்சர் பதவி ஒன்று.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் அவர்களுக்கும் தனது நன்றியையும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஹாபிஸ் நஸிர் அஹமட் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முதலமைச்சர் நியமனம் என்பது எனது பார்வையில் கட்சியின் தலைமை ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் பல கோணங்களில் வருகின்ற சாதக பாதகங்களைச் சிந்தித்து எதிர்வருகின்ற தேர்தல்களில் கட்சியை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு இந்த நியமனம் மிகவும் வரவேற்க தக்க நியமனம் என நான் நம்புகிறேன்.
அத்தோடு இந்த முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஹாபீஸ் நசீர் அஹமட் குர்ஆனை மனனம் செய்தவர், அத்தோடு எல்லோருடனும் மிகச்சிறந்த முறையில் பழகுபவர். மற்றவர்களை கௌரவப்படுத்தக் கூடியவராகவும் நான் பார்த்திருக்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் பிரேதேச வாதங்களை பேசுவதை விட்டு விட்டு இந்த முதலமைச்சரை வைத்து நமது ஊரை அபிவிருத்தி செய்யும் வேலைகளை செய்ய ஒன்று படுவோம்.
கட்சி எடுக்கின்ற முடிவுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். இப்பதவியை வைத்து சமூகத்தையும் கட்சியையும் வளர்த்துச் செல்வதற்கு உங்களால் ஏன்ற அனைத்தையும் செய்யுங்கள் என்று முதலமைச்சரை கேட்டுக்கொள்வதாக எ.சி. யஹியாகான உயர்பீட உறுப்பினர், (நிதி மற்றும் கணக்காளர்க்கான பணிப்பாளர்) அம்பறை மாவட்ட பொருளாளர்) தெரிவித்தார்.
Published by

Leave a comment