“மைத்திரி சிறுபான்மை மக்களின் நலன்களில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு தலைவர்”: ஹிருனிகா

hirunika (2)பொத்துவில்: நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் தங்களின் மதத்தினை தங்கு தடையின்றி சுதந்திரமாக பின்பற்றுவதற்கான களத்தினை இப்புதிய அரசாங்கம் உருவாக்கியுள்ளது என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நேற்று பொத்துவில் பிரதான வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேல் மாகண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரி அவர்கள் சிறுபான்மை மக்களின் நலன்களில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு தலைவர். வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து தனது நன்றிகளை தெரிவிக்க வேண்டும் என்ற ஆசை அவரிடத்தில் இருந்த போதும் துரதிஷ்டமாக அவரால் எல்லா பிரதேசங்களுக்கும் நேரடியாக வந்து தனது நன்றியினை தெரிவித்து கொள்ள முடியாதுள்ளது.

hirunika (2)

அப்படியான பிரதேசங்களுக்கு அவரின் பிரதிநிதியாக என்னை அனுப்பியுள்ளார். அந்த வகையில் வாக்களித்த மக்களாகிய உங்களுக்கு ஜனாதிபதி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தான் எமது வெற்றிக்கு வித்திட்டன என்பதை மிகத்தெளிவாக ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கூறியுள்ளேன்.

hirunika

இந்த பொத்துவில் பிரதேசத்தில் கடற்தொழில், விவசாயம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்ற அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனடி தீர்வினை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Published by

Leave a comment