முகவரி தெரியாத ஹூனைஸ் பாருக்கிற்கு அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக் கொடுத்த தலைவர் றிசாதுக்கு எதிராக அபாண்டங்களை சுமத்துகின்றார் என்கின்றார் அமீர் அலி

ameer aliவவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

வவுனியா: எமது இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது ஆட்களை அதிகம் அதிகம் தேடி சென்று சேர்க்கின்ற கட்சியல்ல, நியாயத்துடனும், நேர்மையுடனும் யார் இணைய முடியுமோ, ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றாக பார்க்க முடியுமோ, அப்படிப்பட்டவர்கள் யாராக இருக்க முடியுமோ அவர்கள் தான் இந்த கட்சியின் அங்கத்தவர்களாக, பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகளாக வரமுடியும் என்ற நிய்யத்துடன் இருக்கின்றோம் என்று சமூர்த்தி, வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி வவுனியாவில் தெரிவித்தார்.

வவுனியா மக்களினால் இன்று ஏற்பாடு செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் வவுனியா நகர சபை உறுப்பினர் முஹம்மத் ஆரிப் தலைமையில் பட்டானிச்சூரில் இடம் பெற்ற கூட்டத்தில் மேலும் அவர் உரையாற்றுகையில்,

இந்தக் கட்சியினை தேடி வருகின்றார்கள். இங்கு வந்து அவர்களுக்கான முகவரியினை பெற்றுக் கொண்டு, இந்தக் கட்சிக்கும்,தலைமைக்கும் துரோகம் இழைத்துவிட்டு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு, இங்கிருந்து பாய்ந்து வேறு கட்சிக்குள் சென்று முகவரியினை தேடிக் கொள்கின்ற ஒரு படலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இது மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ளது. அது போல் வன்னியிலும் ஆரம்பித்துவிட்டது. இதனை ஆரம்பித்து வைத்தவர் தான் வன்னியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் என்பதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று உங்களுக்கு  நன்றாக தெரியும் இந்த மக்களின் போராட்டம் அதற்கு தலைமை தாங்கி தனது  உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்றவர் யார் என்று, இந்தக் கட்சியினை நாம் உருவாக்கிய போது எதிர் கொண்ட சவால்கள் எத்தனையோ, கட்சி போஸ்டர்களை நாம் ஒட்டி இந்த கட்சியினை வளர்த்துள்ளோம், அடியும், உதையும் வாங்கி இந்த கட்சிக்காக உதிரத்தை கொடுத்தவர்கள் எத்தனை உள்ள ங்கள் இருக்கின்றன. இவர்கள் எல்லாம் தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் எம்முடன் இணைந்தவர்கள் அல்ல, பதவிகளுக்காக, பிரதி அமைச்சர் பதிவிக்காக கட்சியினையும், தலைமைத்துவத்தினையும் காட்டிக் கொடுக்கும் உறுப்பினர்கள் இங்கு இப்போது இல்லை. இதற்கு எமது இருக்கின்ற உறுப்பினர்கள் சோரம் போகப் போவதுமில்லை என்பதை திட்ட வட்டமாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.

சுவால்களும்,சதிகளும் நிறைந்து காணப்பட்ட காலத்தில் கூட, இந்த மக்களது தேவைகள், எதிர்பார்ப்புக்கள், இந்திய வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட எத்தனையோ தேவைகள் தொடர்பில் முழுமையாக சிந்தித்து செயற்படும் ஒரு தலைமை இருக்கின்றது என்றால் அது றிசாத் பதியுதீனுக்கு அப்பால் யாரையும் விரல் நீட்டி சுட்டிக்காட்ட முடியாது. சிறுபான்மை கட்சியாக இருந்தாலும், பெரும்பான்மை கட்சியாக இருந்தாலும், 24 மணித்தியாலயங்களும் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கும் இப்படிப்பட்ட ஒரு நேர்மையான தலைமைத்துவத்தை பாதுகாத்து தாருங்கள் என்று இந்த வன்னி மக்களிடம் கோறுவதற்hக தான் நான் மட்டக்களப்pலிருந்து இங்கு வந்திருக்கின்றேன்.

தேர்தல் வருகின்ற போது வருகின்ற தலைமையாக நாங்கள் இருக்க முடியாது. தேர்தல் வந்துவிட்ட செய்தியிரைன கேட்டவுடன், பொட்டணி வியாபாரிகள் வியாபாரத்துக்கு வருகின்ற சந்தர்ப்பவாத தலைமைகளாக நாங்கள் இருப்பதில்லை. நீங்கள் அழைக்கின்ற தூரத்தில் நாங்கள் காதுகளை கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம். உங்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்ற தலைமையாக எமது தலைமை இருக்கின்றது.

எனவே இவ்வாறான அரசியல் கட்சிகள் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு கண்டுள்ள பெரும்பான்மை சிங்கள தலைவர்கள் இதுபற்றி எம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். றிசாத் பதியுதீன் என்கின்ற அரசியல் தலைமை எடுத்த துணிகரமான தீர்மானம் தொடர்பில் இன்று பாராட்டுக்களை அந்த தலைமைகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது என்றால் அது வன்னிக்கு கிடைத்த பெறுமையல்லாவா என்று கேட்க விரும்புகின்றேன்.

எதிர்வருகின்ற காலங்களிலே வர இருக்கின்ற தேர்தல்களிலே இந்த கட்சியின் முகவரியினை பயன்படுத்தியவர்கள், அவர்கள் அனுபவித்துக் கொண்டவர்கள், எடுத்துக்கொண்டவர்கள், வீடு வாங்கியவர்கள், வாகனங்கள் வாங்கியவர்கள் இன்று இந்த பிரதேசத்தில் முழங்கிக் கொண்டு திரிகின்றார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவது தான் எங்களைப் போன்ற ஆத்மார்த்தமான, வக்கான, நேர்மையான அரசியலை செய்கின்ற இந்த தேசிய தலைமைக்கு பின்னால் நீங்கள் வர வேண்டும் என்றால், அது போல் நாடு தழுவிய சிறுபான்மை சமூகம் அணிதிரள வேண்டும் என்றால், கட்சிக்கும்,வாக்களித்த மக்களுக்கும் அற்ப சொற்ப லாபங்களுக்காக துரோகமிழைத்த இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு தகுந்த சாட்டையடியினை நீங்கள் அடுத்த தேர்தலில் கொடுக்க வேண்டும் என்று கேட்க விரும்புகின்றேன்.

ஹூனைஸ் பாருக் அவர்களை தனியாக சந்தித்து கதைத்தோம்,நீங்கள் கட்சிக்கு துரோகம் இழைத்துவிடாதீர்கள், இந்த கட்சிக்கும், தலைமைக்கும் இந்த நாட்டில் மறியாதை இருக்கின்றது தேசியத்தில் மற்றும் அல்ல சர்வதேசத்திலும் அந்த மறியாதை உள்ளது. நீங்கள் கட்சியில் இருந்து தனித்து செல்ல வேண்டாம். நாங்கள் அனைவரும் மசூரா செய்து ஒட்டு மொத்தமாக நாங்கள் செல்வோம் என்று சொன்னோம். உங்களுக்கும்,தலைமைக்கும் இடையில் கருத்து முரண்பாடு இருக்கின்றதா, அது குறித்து கட்சியின் உயர் பீடத்தில் சொல்லுங்கள், நீங்கள் வெளியில் இருந்து விமர்சிப்பதனால் இது குறித்து பேச முடியாது என்று சொன்னோம், தலைவரிடத்தில் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டும் ஜனநாயக உரிமை கொண்ட ஒரு கட்சி இருக்கின்றது என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தான் என்று சொன்னோம்.

ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை.கட்சிக்குள் கட்டுப்பாடுகளை மீறி அவர் கட்சியிலிருந்து வெளியேறினார். எங்கிருந்தோ இருந்த ஒருவரை கையைப் பிடித்து அழைத்துவந்து இவர் தான் ஒரு பிள்ளை இந்த ஆத்மாவை நாம் எமது கட்சியின் பாராளுமன்ற பிரதி நிதியாக ஆக்க வேண்டும் என்று இரவு பகலாக அலைந்து திரிந்து இந்த கதிரையில் அமரச் செய்த இந்த தலைமைக்கும், அவரை உருவாக்கிய கட்சிக்கும் துரோகம் இழைக்கும் என்றால், இது தண்டிக்கப்பட வேண்டியதும், கண்டிக்கப்பட வேண்டியதும் என்பதை இங்கு கூற வேண்டும்.

இவ்வாறானவர்கள் உங்கள் மத்தியில் அமைச்சரின் சகோதரர் என்றும்,உறவினர் என்றும் பல கதைகளை கூறி ஆலாவட்டம் வருவார்கள். இந்த அரசியலில் பல கலைகளை காட்டிவருவார்கள், அதை செய்வோம், இதை செய்வோம் என்று எதையும் செய்யாமல் 4 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்து எமது தலைமையின் தயவால் அரசியல் செய்த ஹூனைஸ்  போன்றவர்கள், வந்து வாக்கு கேட்பார், அவருக்கு உங்களது கைகள் வாக்கு அளிக்குமென்றால். அது இந்த வன்னி மக்களின் வாழ்வுரிமையை பெற்றுத்தந்த றிசாத் என்கின்ற ஆத்மாவுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் இருக்கும் என்பதை நீங்கள் எண்ணி எண்ணி கவலைப்படும் நாள் வராமல் இருக்காது.

இந்த வன்னி மக்கள் 2 பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை கடந்த பொதுத் தேர்தலின் போது தந்தீர்கள். அது இந்த தேசியத்துக்கும்,தலைமைக்கும் கௌரவத்தையும் ஏற்படுத்தி தந்தது. நாங்கள் கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவை ஏற்றுக்கொண்டு, கட்சியின் கட்டுப்பாட்டை கடைப் பிடிக்கின்றதால் எங்களுக்கு முகமே தெரியாத, கட்சிக் கூட்டத்திற்கே வராத இவர்கள் போன்றவர்களுக்கு இடம் கொடுத்தமையினால் தான் எமது கட்சி தேசிய தலைமைத்துவம் தலைகுனிவுக்கு ஆளாக வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்று கூறினார் பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

ameer ali

Published by

One response to “முகவரி தெரியாத ஹூனைஸ் பாருக்கிற்கு அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக் கொடுத்த தலைவர் றிசாதுக்கு எதிராக அபாண்டங்களை சுமத்துகின்றார் என்கின்றார் அமீர் அலி”

  1. ///முகவரி தெரியாத ஹூனைஸ் பாருக்கிற்கு அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக் கொடுத்த தலைவர் றிசாதுக்கு எதிராக அபாண்டங்களை சுமத்துகின்றார் என்கின்றார் அமீர் அலி///

    தனிப்பட்ட முறையில் முகவரி பற்றிப் பேசுவதை அமீர் அலி நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றேல், பலருடைய முகவரிகள் நாறி, நாற்றமெடுத்து விடும்!

Leave a reply to nizamhm1944 Cancel reply