மன்னார்: 100 வருட பழமை வாய்ந்த தனியாருக்கு சொந்தமான மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காக்கையன்குளம் கிழக்கு மற்றும் மேற்கு புறப் காணிகளை மீள பெறும் வகையில் நிள அளவை திணைக்கள அதிகாரிகள் அத்துமீறி உட்புகுந்து அளவை செய்ய முற்பட்டனர்.
இதன் போது அப்பிரதேசத்தில் ஏற்பட்ட அச்ச நிலையினை தொடர்ந்து அங்கு விரைந்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் றியாப் ஆகியோர் பள்ளித்தலைவர்கள் மற்றும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடி இந்த அத்து மீறல் செயல்களை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிகின்றது.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள தமது பிரதேசங்களில் மீள்குடியேற வந்த போது சில காணிகள் வேறு பிரதேச மக்களினால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இம்மக்களுக்கு மாற்று காணிகளை கொடுக்க அரச காணிக் கொள்கைகளுக்கு உடன்பட்டு காணிகள் வழங்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதே வேளை இற்றைக்கு பல வருடங்கள் பழமை வாய்ந்த காணிகளுக்கான உறுதிகள் இருந்த போதும், அதில் மீள்குடியேற தேவையான வசதிகள் இம்மக்களுக்கு உரிய கிடைக்காமையினால் இரண்டும் கெட்ட நிலையில் இம்மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், கடந்த அரசாங்கம் மீள்குடியேறும் மக்களுக்கு தமது வீடுகளை நிர்மாணித்துக் கொள்ளவும், அதே போல் விவசாய மற்றம் தமது வருமான மேம்பாடுகளுக்காக ஒரு ஏக்கர் காணியினை இம்மக்களுக்கு வழங்குவதற்கான பணிப்புரையினை காணி அமைச்சின் செயலாளர், மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு வழங்கியிருந்த போதும், அவ்வப்போது இவைகள் வழங்கப்படாமல் தடங்கள்கள் ஏற்படுத்தப்பட்டும் வந்தது. இந்த நிலையில் இம்மக்களுக்கான அடிப்படை தேவைகளுக்காக காணிகளை வழங்கும் திட்டத்துக்கு அப்பால் இந்த காணிகளை கபளீகரம் செய்யும் வகையில் அதிகாரிகள் இங்கு வருகதைதந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று அரச அதிகாரிகள் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தவர்கள் காக்கையன்குளம் மக்களிடத்தில் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கோறியதாகவும், அதனை அடுத்து காணிகளை தாங்கள் அளவீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்த போது அங்கிருந்த மக்கள் இது எமது சொந்த நிலங்கள் இவற்றை எதற்காக நீங்கள் அளவீடு செய்ய வேண்டும் இதன் பின்னணியில் தங்களுக்கு சந்தேகம் உள்ளது என தெரிவித்து, உடனே வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடன் அங்கு வருகைத்தந்த றிப்கான் பதியுதீன் இது தொடர்பில் வருகைத்தந்த அதிகாரிகளிடத்தில் இம்மக்களின் நியாயமான வேண்டுகோள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், இந்த திடீர் தங்களின் செயற்பாடு மக்கள் மத்தியில சலசலப்பை தோற்றுவித்துள்ளதால், இது தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் அதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியதையடுத்து இந்த அளவீடு செய்யும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் றியாப் தெரிவித்தார்.
Published by



Leave a comment