கொழும்பு: முன்னால் இலங்கை ஜனாதிபதி மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினரின் ஊழல்கள் மற்றும் உல்லாச வாழ்க்கை என்பன வெளிச்சத்திற்கு வரும் நிலையில், மீண்டும் இன்னொரு செய்தி வெளிவந்துள்ளது.
மகிந்த ராஜபக்ஸவின் மூத்த மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பல்வேறு பொது நிகழ்வுகளில் அணிந்து வந்த பெறுமதிமிக்க கைக்கடிகாரங்களின் உண்மையான விலை நிலவரங்களை வைத்து பார்க்கின்ற போது, இலங்கை ரூபாயில் அது – 76,989,850 அதாவது 76 மில்லியன் இலங்கை ரூபாய்கள். ஒரு கைக்கடிகாரத்திற்கு சராசரியாக 5.9 மில்லியன் ரூபாய்கள்.
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆண்டுச்சம்பளம் கூட இந்த ஒரு கைக்கடிகாரத்தை நெருங்காது எனும் நிலையில் இச்சொகுசு வாழ்க்கைக்கான நிதிகள் எங்கே இருந்துள்ளது என்பது தெரிந்த ஒன்றே!
Published by


Leave a comment