சம்மேளன கூட்டம் தொடர்பாக பொறியியலாளர் சிப்லி பாறுக் வாக்குமூலம்

shibly– ஜுனைத் எம். பஹ்த்

காத்தான்குடி: 05.02.2015 அன்று இரவு 9.30 மணியளவில் காத்தான்குடி சம்மேளன ஒன்று கூடல் மண்டபத்தில் பாம் வீதி செப்பணிடுதல் தொடர்பாக நடை பெற்ற கூட்டம் தொடர்பாக பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் வாக்குமூலம் .

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறானது எனவும், அபாண்டமானது எனவும், இந்த பாம் வீதி செப்பணிடுதல் வேலை நடைபெற வேண்டும் என்பதில் மிக அழுத்தங்களை ஒப்பந்தக்காரர்களுக்கு நான் கொடுத்தேன் என்றும் , அத்துடன் அவர் மிகவும் தூய்மையனவர், கரைபடியாதவர் என்பதனை சம்மேளனத்தின் தலைவர் அல்- ஹாஜ் சுபைர் CC அவர்கள் கூடத்தின் சாராம்சமாக தெரிவித்தார்.

அத்தோடு “மாகாண சபை உறுப்பினர் Eng. ஷிப்லி பாறூக் அவர்கள் மிகவும் நேர்மையானவர், அல்லாஹ்வுக்கு பயந்தவர், ஊரில் நடைபெற்ற ஒப்பந்த வேலைகளில் அவர் ஒரு சதத்தையும் தொடவில்லை” என்பதனை முன்னால் பிரதி அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ்  சம்மேளன கூட்டத்தின் முன்னிலையில் ஒப்புக்கொண்டு தெளிவு படுத்தினார்.

இப்பொழுது மக்களுக்கு தெட்டத்தெளிவாக விளங்கும் யார் பொய் சொன்னார்கள் என்று!!!! அல்லாஹ் மிகப்பெரியவன் மிக நீதியாளன் அல்ஹம்துலில்லாஹ். எனத் தெரிவித்தார் .

Published by

Leave a comment