மெல்போன்: எதிர்வரும் 15 ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கள் யாவும் 20 நிமிடங்களில் விற்பனையாகி முடிந்துள்ளன. 11 ஆவது உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் 29ஆம் திகதி வரையில், அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்தில் நடை பெறவுள்ளது.
அடிலெய்ட் மைதானத்தில் மார்ச் 15ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்கள் 20 நிமிடங்களில் விற்பனையாகி முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.3 பில்லியன் ரசிகர்கள் இப்போட்டியை கண்டு ரசிக்க எதிர்பார்த் திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992, 1996, 1999, 2003 மற்றும் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண போட்டியில் இவ்விரு அணிகளும் எதிர்கொள்ளும் ஆட்டத்தில் வெற்றிபெறப் போகும் அணியை பில்லியன் கணக் கான மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
Published by
![india-v-pakistan-semi-final-mohali[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/india-v-pakistan-semi-final-mohali1.jpg?w=150&h=124)
Leave a comment