ஜனாதிபதி மைத்திரி 15ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம்

maithiriகொழும்பு: நான்கு நாள் உத்தி யோக பூர்வ விஜயத்தை மேற் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்றே அவர் இந்தியா செல்கிறார்.

15 ஆம் திகதி இந்தி யாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி 18 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருதரப்புப் பேச்சுவார்த்தை களிலும் ஈடுபடுவார்.

இதனை விடவும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார். இதேவேளை, பெளத்தர்களின் புனித தலமான புத்தகயாவுக்குச் செல்லவுள்ள அவர், அங்கிருந்து திருப்பதி ஆலயத்துக்கும் சென்று தரிசனங்களில் ஈடுபடுவார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்பு இந்தியாவுக்கு செல்லும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்றே அவர் இங்கு வருகை தருகிறார். 15 ஆம் திகதி இலங்கை வரும் பிரதமர் நரேந்திர மோடி 20 ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

Published by

Leave a comment