உலகக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்தால் பரிசுத் தொகை ரூபா 130 மில்லியன்

srilanka cricketகொழும்பு: உலகக்கிண்ணம்-2015 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றால் பரிசுத் தொகையாக 130 மில்லியன் ரூபாவினை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியினை அமைச்சரவை வியாழக்கிழமை வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது

அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுற்றுலாத் துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இந்த நிதி திரட்டப்படவுள்ளதாக குறிப்பிட்டார். தனியார்துறை நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிதியிலிருந்து இலங்கை அணிக்கான பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

srilanka cricket
1996 உலகக் கிண்ண வெற்றியின் போது…

அத்துடன் உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையானது இம்முறை தேசிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன்போது உள்ளுர் தொலைக்காட்சி தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதனை அரசுடமையாக்கும் திட்டம் உள்ளதா என்றும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், உள்ளுர் தொலைக்காட்சி தொடர்பில் தாம் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்றும், உள்ளுர் தொலைக்காட்சியை அரசுடமையாக்கினால் மஹிந்த குடும்பத்தையும் அரசுடமையாக்க வேண்டும் என்றும் நகைச்சுவையாக பதிலளித்தார்.

Published by

Leave a comment