கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றவியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி பட்டத்தை பெறுவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தது முதல், அது தொடர்பான ஆய்வறிக்கை சமர்ப்பித்தது மற்றும் கண்காணிப்பு பேராசிரியரின் பங்கு வரை பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாமல் ராஜபக்ச குற்றவியல் விஞ்ஞானம் சம்பந்தமான கலாநிதி பட்டத்தை பெற தயாராகி வருகிறார். எனினும் கலாநிதி பட்டத்திற்கு முன்னர் பெற வேண்டிய தத்துவ பட்டத்தை முழுமைப்படுத்தாமல் நேரடியாக கலாநிதி பட்டத்தை பெறுவதற்காக கற்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் போராசிரியர் என்.எல்.ஏ. கருணாரத்ன செனட் சபையில் யோசனை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்றி இந்த சிறப்புரிமையை வழங்கியுள்ளார். அத்துடன் நாமல் ராஜபக்சவின் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வுகளை கண்காணிக்கும் பொறுப்பை பூகோளவியல் பேராசிரியரான துணைவேந்தர் கருணாரத்னவே மேற்கொண்டமை இங்கு முக்கிய அம்சமாகும்.
குற்றவியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி பட்டத்திற்கான ஆய்வை பூகோளவியல் பேராசியர் கண்காணித்து வந்துள்ளார். சட்டத்தரணியான நாமல் ராஜபக்ச, சட்டம் தொடர்பான பட்டத்தையும் மோசடியாகவே பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த துஷார ஜயசிங்க என்ற சட்டக்கல்லூரி மாணவர் உயிர் பாதுகாப்பு கருதி இரகசியமான முறையில் நாட்டில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment