மைத்திரி- மகிந்த- சந்திரிக்கா ஆகியோரை கூட்டிணைக்கும் பணியில் சு.க. உறுப்பினர்கள்

maithiri chadrika mahindaகொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூவரையும் எதிர்வரும் பொது தேர்தலில் ஒரே மேடைக்கு கொண்டு வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீலிக்ஸ் பெரேராவின் இல்லத்தில் நேற்று முன்தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதிகள் மூவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து கட்சியின் ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் பிரிவினைகளின்றி கட்சியின் அதிகாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

maithiri chadrika mahinda
ஆவனப் படம்

குரோதங்கள் இன்றி குழந்தைகள் போல ஒற்றுமையாக இருப்பதே தமது நோக்கம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், நடைமுறையிலுள்ள மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளை தானே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மேற்படி விடயத்தில் ஜனாதிபதி மைத்தரிபால மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கருத்துக்கள் எதுவும் உத்தியோகபூர்மாக தெரியவில்லை.

Published by

One response to “மைத்திரி- மகிந்த- சந்திரிக்கா ஆகியோரை கூட்டிணைக்கும் பணியில் சு.க. உறுப்பினர்கள்”

  1. It cannot be an intelligent move!

Leave a comment