அல்-மனார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருட பூர்த்தி

almanarஅல் மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினையும், அல்-மனார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருட பூர்த்தியையும் முன்னிட்டு அல் மனார் நிறுவனம் நேற்று (04.02.2015) புதன் கிழமை முழுநாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

அல் மனார் நிறுவனத்தின் செயளாலர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அதிகாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நான்கு கட்டங்களாக நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

ஆன்மீக, தேசிய, விளையாட்டு மற்றும் கலை கலாசார நிகழ்வுகளில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், உலமாக்கல், இளைஞர்கள் அடங்கலாக நிர்வாகத்தினரும் பங்கு பற்றி இருந்தனர்.

அல் மனார் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் தலைமையில் நடை பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கொடியினை பள்ளிவாயல்களின் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம். சுபைர் மற்றும் அல் மனார் நிறுவனத்தின் கொடியினை அதன் உப தலைவர் எஸ்.எம். ஷாதுலி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

இந்திகழ்ச்சிகள் யாவற்றையும் அல் மனார் நிறுவனத்தின் பகுதி நேர விரிவுரையாளர்களான எம்.பி.என். மின்ஹாஜ் மற்றும் ஏ.ஆர்.எம் இம்தியாஸ் ஆகியோர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment