காத்தான்குடி: 03.02.2015 காத்தான்குடி பரீட் நகர் வீதியை செப்பனிட்டு தரும் படி பொது மக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்ப்ட்டது. இந்த ஆர்ப்பாட்ட்த்தின் போது அனைத்து அரசியல் வாதிகளும் வருகை தந்தனர். ஆனால் இதன் முக்கிய சூத்திர தாரியான பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சமூகமளிக்கவில்லை. இவர் சார்பாக நகரசபை தவிசாளர் அஸ்பர் வந்திருந்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கும் சம்பவ இடத்துக்கு வருகை தந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் முக்கிய விடயமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பதாதையில் குறிப்பிட்ட கொந்தராத்துக்காரின் தொலைபேசி இலக்கம் காணப்பட்டது. அந்த இலக்கத்துக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அழப்பை ஏற்படுத்தினார். அருகிலே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பரீட் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் காணப்பட்டனர். குறித்த தொலைபேசி அழைப்பு மக்கள் அனைவரும் கேட்கும் விதமாக பேசப்பட்டது.
அதிலே குறிப்பிட்ட கொந்தராத்துக்காரர் சொன்னார் இந்த பாம் வீதி அபிவிருத்தி 106.6 மில்லியன் அல்ல அது 65 மில்லியன் என்று. இவ்வாறு பல விடயங்களை அவர் சொல்லி முடித்தார். இவ்வாறு ஆர்பாட்டம் தொடர்கையில் நகரசபை தவிசாளர் அஸ்பர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
இதன் போது சிப்லி பாரூக்கினால் இவ்வீதி அபிவிருத்தி தொடர்பாக மக்களை தெளிவு படுத்தினார். அவர் இவ்வீதி தொடர்பான ஆவணங்களை காட்டினார். அதிலே குறித்த கொந்தராத்துகாரருக்கு 65 மில்லியன் என கூறப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வீதி அபிவிருத்திக்கு தான் எவ்வகையிலும் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை கூறினார். இதன் பின்னர் தவிசாளர் அஸ்பர் தனதுரையில் இவ்வீதியின் அபிவிருத்திக்கு தடையாக சிப்லி பாரூக் இருப்பதாகவும் அதன் தொலைபேசி உரையாடல் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார். இதன் போது மக்கள் அனைவரும் கொதித்தெழுந்து அதை போட்டுக்கு காட்டுமாரு வேண்டினார். ஆனால் அது கடைசி வரை பலனளிக்கவில்லை.
இது இவ்வாறு இருக்கையிலே குறித்த அந்த தொலைபேசி உரையாடல் சம்பவ மறுநாள் அது சமூக வலைத்தளங்களிலே பரப்பப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் பல கேள்விகளை உண்டு பன்னியுள்ளது.
1. ஏன் தவிசாளர் அஸ்பர் குறித்த தொலைபேசி உரையாடலை சம்பவ இடத்தில் போடவில்லை?
2. சிப்லி பாரூக் மற்றும் கொந்தராத்துகாரர் பேசிய தொலைபேசி உரையாடல் தன்னிடம் உள்ளதாக சொன்ன தவிசாளர் அஸ்பர் ஏன் அதை அப்லோட் பன்னாமல் தான் பேசிய தொலைபேசி உரையாடலை ஏன் இட்டார்?
3. ஏன் தவிசாளர் அஸ்பர் குறித்த தொலைபேசி உரையாடலை சம்பவ இடத்தில் போடவில்லை?
4. முதலாவது உரையாடலில் பா.உ. ஹிஸ்புல்லாஹ் தனது ஒவ்வொரு சொல்லிலும் சிப்லியா.. சிப்லியா.. என்று ஏன் கேட்கிறார்… (அரசியல் பழிவாங்களா.. சிந்திக்க)
5. ஏன் கொந்தரத்துக்காரர் கரீம் ஹாஜி, சிப்லி பாரூக் இடைஞ்சல் என்று சொல்லவில்லை?
6. கரீம் ஹாஜியே சொல்லாமல் ஏன் ஹிஸ்புல்லாஹ் சிப்லி பாரூக் மீது பழியை போடுகிறார்?
7. ஹிஸ்புல்லாஹ் மனாருல் ஹுதா பள்ளியில் சொன்ன 106.6 மில்லியன் என்ற தொகையை எவ்வாரு நிரூபிக்கிறார்?
8. கொந்தரத்துக்காரர் 65 மில்லியன் என்று சொல்லுகிறார். அப்போது ஹிஸ்புல்லாஹ் சொன்னது பொய்யா?
9. ஊரில் இருந்து கொண்டும் ஏன் ஹிஸ்புல்லாஹ் சம்பவ இடத்துக்கு சமூகமளிக்கவில்லை?
10. சிப்லி பாரூக் சொன்னது பொய் என்பதை ஹிஸ்புல்லாஹ் நிரூபிப்பாரா?
11. அந்த 2 தொலைபேசி உரையாடல்களும் எப்போது பேசப்பட்டவை?
12. தவிசாளர் அஸ்பரினால் குறித்த கொந்தரத்துக்காரருக்கு கொடுக்கப்பட்டதாக சிப்லி பாரூக் காட்டிய கடிதத்தை அஸ்பர் மறுப்பாரா?
Published by

Leave a comment