அல்ஹம்துலில்லாஹ்! நான்காவது வருடத்தில் காலடிவைக்கிறது ‘YOURKATTANKUDY’

Your Kattankudy Logo

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்பான வாசகர் இதயங்களே,

04-02-2012- இற்றைக்கு 3 வருடங்களுக்கு முன்னர், இதே போன்றதொரு இலங்கையின் சுதந்திர தினமான இதே தினத்தில் காத்தான்குடியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது இணையத்தளமான http://www.yourkattankudy.com உலகை முதன்முதலாக வலம் வந்தது.

இன்றுடன் வருடங்கள் 3 நிறைவடைந்து, நான்காவது வருடத்தில் YOURKATTANKUDY வெற்றியுடன் காலடிவைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

காத்தான்குடியின் பிரதான அமைப்புக்களையும், அதன் செயற்பாடுகளையும் ஒரே தளத்தின்கீழ் தொகுத்து வடிவமைத்து உலகில் எந்த நகரும், எந்த ஊரும் கொண்டிராத ஓர் வலைத்தளமாக இன்றுவரை வெற்றியுடன் திகழ்கிறது.

உள்ளுர், இலங்கை, மற்றும் உலக செய்திகளை அவசரப்படாமல் உண்மையென்றால் மாத்திரம் செய்திகளாகப் பிரசுரிப்பதில் எமது இணையத்தளத்தின் பங்கு அளப்பரியது.

இதனால்தான் கடந்த 3 வருடங்களாக எமது தளத்துக்கே உரிய வாசகர்களின் வருகையை அசைக்க முடியாமல் இருக்கின்றது.

ஓர் சாதாரன சராசரி நபருக்கு உரிய அன்றாட வேலை விடயங்கள், குடும்ப பராமரிப்பு என்பனவற்றிற்கும் மத்தியில், எமது தளம் அல்லாஹ்வின் உதவியால் வெற்றியாக இயங்கிவருகிறது.

ஆரம்பம் முதல் இன்றுவரை அரசியல் சாயமற்ற தனித்தளமாக இயங்கும் YOURKATTANKUDY, இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்தும் அதன் கொள்கையில் உறுதியாக இருக்கும்.

அரசியல்வாதிகள், சமூக இயக்கங்கள் மற்றும் சமூகத்தில் பொறுப்புடையவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் YOURKATTANKUDY ஒருபோதும் பின்னின்றதில்லை. இதனால் அண்மைக்காலத்தில் பல எச்சரிக்கைகளையும், அழுத்தங்களையும் எமது இணையத்தளம் வழமைபோன்று சந்தித்தது.

எமது செய்தியாளர்களின் ஊர்ஜிதமான செய்திகளுடன், வாசகர்களின் ஆக்கத்திற்கு அதிக வரவேற்பை அளித்துவரும் ஓர் தளம் என்பதை எவரும் மறக்கமுடியாது. விளையாட்டுச் செய்திகளுக்கும் ஓர் தனிச் சிறப்பு எம்மிடம் இருப்பதை வாசகர்கள் அறியாததல்ல.

தங்களது ஆளடையாளங்களை உறுதிப்படுத்தி அனுப்பிவைக்கும் வாசகர்களின் ஆக்கம் நியாயமானதாகவும், சமகால விடயங்களை முக்கியத்துவப்படுத்தி எழுதப்பட்டிருப்பினும் அவற்றை பிரசுரிப்பதில் எமது நிர்வாகம் ஒருபோதும் தயங்கியதில்லை. ஏனெனில் வாசகர்களின் ஆக்கங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் ஓர் தனித்தளமாகவும் YOURKATTANKUDY திகழ்கிறது.

எமது வாசகர்களால் அல்லது எமது எழுத்தாளர்களால் எழுதிப்பிரசுரிக்கப்படும் கட்டுரைகளில் அதிருப்தி இருக்குமாயின், குறித்த கட்டுரையில் விமர்சிக்கப்படுபவர், கட்சி அல்லது குழு அதற்கான மறுப்பறிக்கையினை உத்தியோகபூர்வமாக எமக்கு அனுப்பிவைக்கும்போது, அதனை மனமுவந்து பிரசுரிப்பதிலும் YOURKATTANKUDY ஒருபோதும் பின்னிற்காது.

தேர்தல் காலங்களின்போது எமது துல்லியமான களக்கணிப்பு, ‘அரசியல்களம்’ கட்டுரைகள் என்பன அல்லாஹ்வின் உதவியால் எமது வளர்ச்சிக்கு மென்மேலும் அடித்தளமிட்டிருந்தன.

இலங்கையில் ஆட்சி மாற்றம் தேவை என்பதை முதன் முதலில் கட்டுரையாக வெளியிட்டதும் எமது தளம் என்பதையும் இலங்கை மக்கள் மறக்கமாட்டார்கள். அழுத்கமை எரிந்துகொண்டிருக்கையில் இலங்கை முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து பொதுபல சேனாவுக்கு எதிராக ஹர்த்தாலை மேற்கொள்ளுமாறு இலங்கை முஸ்லிம்களை முதன்முதலில் ஒன்றிணைத்திருந்ததும் எமது தளமே!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் குடும்ப ஆட்சி மோசடிகளை அவர்களது ஆட்சிக்காலத்தின்போதே பல கோணங்களில் விமர்சித்து, உலகுக்கு உண்மையை வெளிக்கொணர்ந்ததிலும் எமது தளத்திற்கு அளப்பரிய பங்கு இருக்கின்றது.

அதே போல் இன்றைய புதிய அரசாங்கமும், இவ் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தவறுகள் செய்யும் பட்சத்தில் அதனையும் மக்களுக்கு தெரியப்படுத்துவதில் எமது ஊடகம் முன்னிற்கும் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

அழுத்கமை, தர்ஹா நகர் எரியும்போது, அம்மக்களுக்காக 24 மணிநேரமாக உலகுக்கு குரல்கொடுத்திருந்ததுடன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பத்திரிகைகளுக்கும் எமது ஊடகமூலமாக இவ்விடயத்தை உடன் தெரியப்படுத்தியிருந்தோம்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் கைது செய்யப்பட்டிருந்த ஜோர்தானிய விமானி, நேற்று இரும்புக்கூண்டில் அடைக்கப்பட்டு தீ இட்டு அநியாயமாக கொல்லப்பட்டிருக்கின்றார். தீயால் தண்டணை வழங்கும் உரிமை அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது. இவர்களுக்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது என்பதையும் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டி நிரூபித்திருந்தோம்.

இஸ்லாத்தின்பேரால் தீவிரவாத்தைத் தூண்டி அப்பாவி மக்களையும், சிறைக்கைதிகளையும், பணயக் கைதிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் அழித்தொழிக்கும் உலக தீவிரவாத இயக்கங்களை எதிர்ப்பதில் எமது தளம் முன்னிற்கிறது.

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த அழகிய முன்மாதிரிகளைப் புறக்கணித்து, அற்ப இலாபங்களுக்காக மனித தலைகளை வெட்டி வீழ்த்துவதால் உலகில் இஸ்லாத்தை நிலைநாட்ட முடியாது. இவ்வியக்கங்களின் அராஜகங்களையும், அநியாயங்களையும் தெட்டத்தெளிவாக எமது தளத்தில் பதிவேற்றி வருகிறோம். இதற்கு ஆரம்பத்தில் பல எதிர்ப்புக்கள் வாசகர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இன்று உண்மையை அறிந்தவர்களாக எமது வாசகர்கள் உள்ளனர்.

அழுத்தங்கள், தடைகள், எச்சரிக்கைகள் என்பவைகளைக் கடந்து அல்லாஹ்வின் உதவியால் இன்று 4வது வருடத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்துவைக்கும் எமது தளத்திற்கு, இலங்கை வாசகர்கள் முதலாவதாகவும், கட்டார் வாசகர்கள் இரண்டாமிடத்திலும், சவுதி அரேபியா வாசகர்கள் 3ம் இடத்திலும், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய வாசகர்கள் முறையே 4, 5வது இடத்திலும் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தினசரி வருகைகளாக இடம்பிடித்திருக்கின்றனர்.

மேலும், அரபு அமீரகம், குவைட், ஓமான், பஹ்ரைன், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஆபிரிக்கா, ஐரோப்பா உட்பட உலகில் ஏனைய நாடுகளிலிருந்தும் தினசரி எமது இணையத்தளத்திற்கு வரும் எமது வாசகர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் உடனுக்குடன் செய்திகளை பல தியாகங்களுக்கு மத்தியில் அனுப்பிவைக்கும் அன்புள்ள காத்தான்குடி ஊடகவியலாளர்கள், இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து செய்திகளை அனுப்பிவைக்கும் பகுதிநேர செய்தியாளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வூடகப்பணியில் பல தியாகங்களுக்கு மத்தியில் பல தடைகளைக் கடந்து வெற்றியாக அன்றிலிருந்து இன்றுவரை இயக்கிவரும் தலைவர், உதவி இயக்குனர்கள், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

நன்றி
இவ்வண்ணம்

இயக்குனர்

Published by

3 responses to “அல்ஹம்துலில்லாஹ்! நான்காவது வருடத்தில் காலடிவைக்கிறது ‘YOURKATTANKUDY’”

  1. உங்கள் சேவை அளப்பரியது வாழ்த்துக்கள்

  2. We pray to continue your service.

  3. உங்கள் சேவை அளப்பரியது வாழ்த்துக்கள்
    அல்ஹம்துலில்லாஹ்!

Leave a reply to mohmedrislaam Cancel reply