பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம்

Muslim Baby Girls (4)[1]முஹம்மது பஹத்

நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ‘இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும். நூல்: புஹாரி

நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், ‘யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள். நூல்: முஸ்லிம்

பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம், குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற எண்ணமே வரவே கூடாது.

நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்று அவன் வாக்குறுதி தந்து விட்ட பிறகு, அதை பொருட்படுத்தாமல் நாம் செயல்படுவது அல்லாஹ்வின் வாக்குறுதியை கூட நாம் மதிக்காதது போல ஆகும் என்பதையும் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம்.
மறுமையில் வெற்றி பெறுவோம்.

Published by

Leave a comment