கொழும்பு: வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் நேரடியாக மக்களை சென்றடைவதற்குத் தடையாகவுள்ள காரணிகளைக் கண்டறிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புடன் சந்தையில் பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றனவா?
என்பதை கண்டறிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
சந்தையில் நுகர்வோருக்கு குறைக்கப்பட்ட விலையில் பொருட்கள் கிடைக்கின்றனவா? என்பது தொடர்பாக நேற்று முன்தினம் திறைசேரியில் விசேட கலந்துரையாட லொன்று திறைசேரி செயலாளருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிக்கும் இடையே நடைபெற்றது.
அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்ததுடன், விலைகுறைப்பு நேரடியாக மக்களைச் சென்றடைவதைக் கண்காணிக்கும் நோக்குடன், மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக பொறிமுறையொன்றை தயாரிப்பது குறித்தும் நேற்றைய பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டுள்ளது.
Published by

Leave a comment