கிழக்கு மாகாணத்தில் ஆட்டோக்களுக்கு வாசிப்புமானியை நடைமுறைப்படுத்துமாறு உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சரிடம் வேண்டுகோள்

azver llb aswer– சட்டமுதுமாணி எம்.ஐ.எம். அஸ்வர்

மட்டக்களப்பு: இலங்கையில் சகல பிரதேசங்களிலும் ஆட்டோக்களுக்கு வாசிப்புமானி கட்டாயப்படுத்தி அமுல்ப்படுத்தப்பட்டு இருக்கும் வேளையில் கிழக்கு மாகாணத்தில் இந்த நடைமுறை அமுலில் இல்லாது இருப்பதனால் ஆட்டோவை பயன்படுத்தும் பொதுமக்கள் அனேக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இதனால் கிழக்கு மாகாணத்தில் ஆட்டோக்களுக்கு

வாசிப்புமானியை கட்டாயப்படுத்தி அமுல்ப்படுத்துமாறு உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் அவர்களிடம் சட்டமுதுமாணி எம்.ஐ.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் புதிய அரசாங்கம் பெற்றோல் உட்பட ஏனைய எரிபொருட்களுக்கு கணிசமான அளவில் விலைகளைக் குறைத்துள்ள நிலையில் அதன் பிரதி பலன்களை மக்களுக்கு சென்றடைய வைக்கும் பொறுப்பும் முக்கியமானதாகும். வாசிப்புமானி நடைமுறையில் இல்லாததால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் ஆட்டோ போக்குவரத்திற்கு அறவிடப்படுவது இல்லை.

azver llb aswer
சட்டமுதுமாணி எம்.ஐ.எம். அஸ்வர்

பிரயாணிகளுக்கும் ஆட்டோ சாரதிகளுக்கும் இடையில் பல பிரச்சனைகள் இடம்பெற்றுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள சட்ட முதுமாணி எம்.ஐ.எம்.அஸ்வர் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் ஆட்டோக்களுக்கு வாசிப்புமானியை கட்டாயப்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவருமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Published by

Leave a comment