கட்டார் விபத்தில் இலங்கை விமானப் பணிப்பெண் பலி

srilankanடோஹா: கட்டாரின் டோஹாவில் இடம் பெற்ற விபத்தொன்றில் அமென்ட்ரா டி குவே எனும் இலங்கை விமானப் பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் ஒரு விமானப் பணிப் பெண்ணும் இரு ஆண்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி நேற்று முன்தினம் இரவு பயணிக்கவிருந்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் பணிப் பெண்களே இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத் துள்ளனர்.

இவர்கள் சுற்றுலா சென்றிருந்த வேளை ஜீப் வண்டி கவிந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் இடம்பெற்ற வேளை ஜீப்பில் அறுவர் பயணித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

srilankan
பலியான அமென்ட்ரா டி குவே

Published by

Leave a comment