“ஐ.எஸ் கோரும் சஜிதா ரிஷாவியை விடுவிக்கத் தயார்”: ஜோர்தான்

isisலண்டன்: ஐ. எஸ் இயக்க ஆயுததாரிகளால் பிடித்துவைக்கப்பட்டுள்ள ஜோர்தானிய விமானியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கைதி பரிமாற்றத்துக்கு தயாராக இருப்பதாக ஜோர்தான் அறிவித்துள்ளது. ஜப்பானிய பணயக் கைதி கென்ஜி கோட்டோவை ஐஎஸ் ஆயுததாரிகள் கொலைசெய்துள்ள நிலையில், ஜோர்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கென்ஜி கோட்டோவின் கொலையை கண்டித்துள்ள ஜோர்தானிய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர், ஜோர்தானில் சிறைவைக்கப்பட்டுள்ள அல்கைதா குண்டுதாரியான சஜிதா அல்- ரிஷாவியை விடுவிக்க தங்களின் நாடு தயார் என்று கூறியுள்ளார்.

isis

ஐஎஸ்- இன் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்த விமானத்திலிருந்த ஜோர்தானிய விமானி முவாத் அல் கஸ்ஸாஸ்பி அந்த இயக்கத்தினரால் பிடித்துவைக்கப்பட்டிருந்தார். ஜப்பானிய பணயக் கைதியான ஊடகவியலாளரை விடுவிப்பதற்கு சஜிதா அல்- ரிஷாவியை ஜோர்தான் விடுவிக்க வேண்டும் என்று ஐஎஸ் கோரிவந்தது.

ஆனால், தங்களின் விமானியையும் ஐஎஸ் விடுவிக்க வேண்டும் என்றும், அவர் இன்னும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் ஜோர்தான் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment