அரசியல் விருட்சமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது: றிசாத் பதியுதீன்

unnamed1பொத்துவில்லில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மற்றும் பொத்துவில் செய்தியாளர் எம்.ஹூதா

பொத்துவில்: பொத்துவில் மக்களுக்கு அரசியல் வழிகாட்டல்களை கொடுக்கும் ஒரு அரசியல் விருட்சமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று பொத்துவில்லில் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு கூட்டம் பொத்துவில் பஹ்ரியா கல்லூரியில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழு தலைவர் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல.எஸ். ஹமீட், ஆசிரியர் அனஸ், பொறியிலாளர் முர்சித், சட்டத்தரணி இஸ்மாயில் ஆதம் லெப்பை உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இதன் போது கலந்து கொண்டனர்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில்,

இதற்கு பின்னரும் இப்படிப்பட்ட ஒரு சமூகத்தை அழிக்க துடிக்கும் சக்திகளுக்கு சாமரம் வீசும் ஒன்றாக வைத்துக் கொண்டு இருக்காது என்பதை உணர்த்தும் வகையில் நாம் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து எமது சமூகத்தின் எல்லா தரப்புக்களுடனும் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்களை செய்து எமது ஒட்டு மொத்த ஆதரவை நாம் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி இந்த நாட்டின் இன ஒற்றுமை, சமூக பாதுகாப்பு என்பனவற்றுக்கு வித்திட்ட கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை நாம் மக்கள் மயப்படுத்துகின்றோம்.

மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்த கட்சியினை உருவாக்கியதன் யதார்தத்தை கற்றுத் தந்த மண் இன்று எதனைப்பற்றி பேசுகின்றது என்றால் இந்த கட்சியினை உருவாக்கி முழு இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமையினை உருவாக்கிய இந்த முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட நோக்கம் மறந்துவிட்டுள்ளதை இங்கு இந்த மக்கள் முன் வைக்கும் கோறிக்கைகளை பார்க்கின்ற போது கவலைத்தருகின்றது.

30 வருடங்களாக இந்த முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து நீங்கள் அனுபவித்தது எதுவும் இல்லையென்று ஆதங்கப்படுகின்ற போது அதனை பார்த்து நாங்கள் கவலையடைகின்றோம். வெறுமனே பதவிகள் மட்டும் தான் தேவை என்று நினைப்பது முறையற்றதொன்றாகும். அல்லாஹ் நாடியவர்களுக்கே கொடுப்பான் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் இருக்க வேண்டும். வெறும் பொய் வாக்குறுதிகளை உங்களுக்கு வழங்குவதற்hக நாங்கள் இங்கு வரவில்லை. நீங்கள் எங்களது பாதையினை பாருங்கள், ஏனைய மாவட்டங்களில் இடம் பெறும் அபிவிருத்திகளை பாருங்கள், அந்த அபிவிருத்தி உங்களது காலடிக்கு வந்து விழுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை நீங்களும் பெற்றுக் கொள்ள அனைவரும் இணையும் ஒரு சந்தர்ப்பத்தை எமது கட்சி உங்களுக்கு பரிசாக கொடுக்க இருக்கின்றது.

நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் உங்களது பிரதேசத்துக்கு இந்த அபிவிருத்திகளை நாம் கொண்டுவருவோம் என்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறினார்.

unnamed

Published by

Leave a comment